Earn Rs.5,000 through ICICI HFC Referral Programme

அறிமுகம்

உங்களுடனான எங்களது விலைமதிப்பற்ற உறவை நாங்கள் கொண்டாடுகிறோம், உங்கள் செல்வத்தை பெருக்குவதற்கு எங்களின் உயர்-மதிப்பிடப்பட்ட எஃப்.டி. இல் முதலீடு செய்ததற்கு நன்றி. ஐசிஐசிஐ எச்எஃப்சி என்பது ஐசிஐசிஐ வங்கி லிமிட்டெட்டுக்கு முற்றிலும் சொந்தமான அதன் துணை நிறுவனமாகும். அரசின் 'அனைவருக்கும் வீடு' என்ற முயற்சியில் நாங்களும் இணைந்துள்ளோம், மேலும் உங்கள் வீட்டு வேலைக்காரர்கள் மற்றும் பிற உதவியாளர்கள் போன்ற சமூகத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு மலிவு விலையில் வீட்டுக் கடன்களை வழங்குகிறோம்.

இப்போது நீங்கள் உங்களின் உதவியாளர் தங்களின் கனவு இல்லத்தை சொந்தமாக்கிட அவர்களுக்கு உதவ முடியும்.

 

நிலம் அல்லது மனை வாங்குவதற்கு, சொந்தமாக உள்ள நிலத்தில் வீடு கட்ட மற்றும் வீட்டில் கூடுதலாக கட்டுமான வேலைகளை மேற்கொள்ள என அனைத்திற்கும் நாங்கள் கடன்கள் வழங்குகிறோம். வேறு வங்கியில் ஏற்கனவே வீட்டுக் கடன் பெற்றுள்ள கடனாளிகளுக்கு கவர்ச்சிகரமான வட்டி வீதத்தில் வீட்டுக் கடனின் மீதமுள்ள தொகையை இங்கு மாற்றிக்கொள்ளும் வசதியையும் நாங்கள் வழங்குகிறோம்.

எனினும், கம்பீரத்துடனும் மற்றும் பாதுகாப்பு உணர்வுடன் வாழ முடியக்கூடிய ஒரு சொந்தவீடு வாங்க தேவையான நிதி திரட்ட பல மக்களுக்கு குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்குத் தெரியாது அல்லது கடினமாக இருக்கலாம்.

 

ஐசிஐசிஐ எச்எஃப்சி பரிந்துரை திட்டத்தின் கீழ், வீடு கட்ட அல்லது வாங்க விரும்பும் பிளம்பர், காய்கறி மற்றும் பழ விற்பனையாளர், திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறு மற்றும் குறு வணிக முதலாளிகள் போன்ற உங்கள் உதவியாளர்களை நீங்கள் பரிந்துரைக்கலாம். எங்கள் மலிவு வீட்டுக் கடன் திட்டமான, அப்னா கர் ட்ரீம்ஸ் குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட மக்கள் ஒரு சொந்தவீடு வாங்க உதவிட வடிவமைக்கப்பட்டுள்ளது.

உங்களை பாராட்டும் ஒரு விதமாக, நீங்கள் பரிந்துரைத்த நபருக்கு நாங்கள் கடன் வழங்கியப் பிறகு, உங்களுக்கு `5,000 மதிப்புள்ள ஒரு கூப்பனை அன்பளிப்பாக அளிப்போம். நீங்கள் அத்தொகையை மீட்டுக்கொள்ளலாம் அல்லது ஒரு நல்ல காரியத்திற்கு உங்கள் பங்கை அளிக்கும்விதமாக இந்த `5,000 ஐ பெண் குழந்தை படிப்பிற்காக எங்களின் என்.ஜி.ஓ பார்ட்னரான கிவ் இந்தியா (லோகோ) க்கு நன்கொடையாக அளிக்கலாம். உங்களுக்கும் நீங்கள் அறிமுகப்படுத்தியவர்களுக்கும் சேவை செய்ய நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இலக்குகள் பெரியதாகவோ மற்றும் சிறியதாகவோ இருந்தாலும் அவை அனைத்திற்கும் நாங்கள் நிதி உதவி செய்கிறோம்.

முன்னேறி செல்லுங்கள், எங்கும் மகிழ்ச்சியைப் பரப்பிடுங்கள்

 

பரிந்துரைக்க தொடங்கவும்

ஒரு வீட்டை சொந்தமாக்கிட விரும்பும் பணிப்பெண்கள், டிரைவர்கள், பாதுகாப்பு நபர்கள் அல்லது உதவியாளர்கள் போன்ற உங்களுக்கு உதவிபுரியும் ஊழியர்களின் பெயர்களை நீங்கள் இப்பொழுதே இன்றே பகிர்ந்து கொள்ள ஆரம்பிக்கலாம்.

Customer Referral Form

என் விவரங்கள்

Enter Full Name
Enter Mobile Number
Enter valid PAN number
Enter and select a valid location

Referral Details

Enter Full Name
Enter Mobile Number
Enter valid Email Id
Enter and select a valid location
Select Product Type
Accept the terms & conditions

இந்த பரிந்துரை திட்டம் எவ்வாறு வேலை செய்கிறது?

நீங்கள் உங்களின் உதவியாளர்களை எங்களுக்குப் பரிந்துரைத்து, 3 எளிய படிகளில் வெகுமதிகளை சம்பாதிக்கவும் முடியும்

படி 1: உங்கள் பரிந்துரைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

         a.   உங்கள் விவரங்களை பூர்த்தி செய்யவும்     

         b. நீங்கள் பரிந்துரைக்கும் நபரின் விவரங்களை பூர்த்தி செய்யவும்           

படி 2: கடன் தேவைகளுக்கு நீங்கள் பரிந்துரைத்த நபரை நாங்கள் தொடர்புகொள்வோம்

படி 3: நீங்கள் பரிந்துரைத்த நபருக்கு நாங்கள் வீட்டுக் கடன் வழங்கியப் பின், வெகுமதிகளை சம்பாதிக்கத் தொடங்குங்கள்

 

திட்டத்தின் கீழ் கிடைக்கக்கூடிய வெகுமதிகள்

 

நீங்கள் பரிந்துரைத்தவர்களுக்கு வெற்றிகரமாக கடன் வழங்கியப் பிறகு, நீங்கள் பெறும் வெகுமதிகளைப் பற்றித் தெரிந்துக்கொள்ளப் பின்வரும் படிகளைக் காணவும்.

  1. அப்னா கர் ட்ரீம்ஸ் வீட்டுக் கடன், சொத்து மீதான கடன் (LAP), சொத்து மீதான மைக்ரோ கடன் & இருப்பு மாற்றல் ஆகியவற்றிற்கு நீங்கள் 1 வாடிக்கையாளரை பரிந்துரைக்கிறீர்கள்
  2. நீங்கள் பரிந்துரைத்த நபருக்கு நாங்கள் கடன் வழங்கியப் பிறகு, நீங்கள் 5,000 மதிப்புள்ள கூப்பனை வெல்கிறீர்கள் அல்லது இந்த 5,000 ஐ பெண் குழந்தை படிப்பிற்காக எங்களின் என்.ஜி.ஓ பார்ட்னரான கிவ் இந்தியா (லோகோ) க்கு நன்கொடையாக அளிக்கலாம்

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளும்

  • ஐசிஐசிஐ எச்எஃப்சி, பரிந்துரைக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு கடன் வழங்கிய 7 வேலை நாட்களுக்குள் உங்களுக்கு இ-பரிசு கூப்பனை அனுப்பும். ஒரு பரிந்துரைப்பாளர், தன்னை அல்லது அவள் கணவர்/அவரது மனைவி, பெற்றோர்களை பரிந்துரைத்தல் போன்ற சூழ்நிலைகளில் இத்திட்டம் பொருந்தாது ஆனால் தன்னுடைய நெருக்கமான உறவினர்களான தன்னுடைய பிள்ளைகள் மற்றும் உடன்பிறந்தோர்களை பரிந்துரைக்க முடியும். வங்கியின் ஏற்கனவே வாடிக்கையாளர்களாக உள்ளவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது
  • 5,000 ஐ பெண் குழந்தை படிப்பிற்காக எங்களின் என்.ஜி.ஓ பார்ட்னரான கிவ்இந்தியா (லோகோ) க்கு நன்கொடையாக அளிக்க விரும்புகிறீர்கள் எனில், எங்கள் பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள உங்களின் நிரந்தர வீட்டு முகவரியில் என்.ஜி.ஓ இலிருந்து ஒரு ரசீதைப் பெறுவீர்கள். என்.ஜி.ஓ இன் நற்சான்றுகள், அது மேற்கொள்ளும் செயல்கள் குறித்து நாங்கள் பின்னணி சோதனை செய்திருந்தாலும், என்.ஜி.ஓ மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளுக்கும் செயல்களுக்கும் ஐசிஐசிஐ எச்எஃப்சி பொறுப்பேற்காது என்பது இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.

  • ஐசிஐசிஐ எச்எஃப்சி க்கு எந்த நேரத்திலும், வாடிக்கையாளருக்கு முன்னறிவிப்பு ஏதும் கொடுக்காமல் அது வழங்கும் சலுகைகளில் மாற்றம் செய்யவோ ரத்து செய்யவோ அல்லது நிறுத்திவைக்கவோ தனித்தே அதிகாரம் கொண்டிருக்கும்.

  • பரிசு கூப்பன் செல்லுபடி காலம் முடிவடைந்துவிட்டால், ஐசிஐசிஐ எச்எஃப்சி கூப்பனைப் புதுப்பிக்க பொறுப்பேற்காது

  • அனைத்து பிணக்குகள் / குறைகள் மும்பை நீதிமன்றங்களின் தீர்ப்பாயத்துக்கு மட்டுமே உட்பட்டவை
  • வெகுமதி பெறுவதில் தாமதமானால், தயவுசெய்து உங்கள் கேள்வியை customer.care@icicihfc.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பவும் அல்லது 18002674455 என்ற எண்ணில் எங்களை தொடர்பு கொள்ளவும்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்


ஐசிஐசிஐ எச்எஃப்சி பரிந்துரைதிட்டம் எங்களிடம் ஏற்கனவே நிலையான வைப்பு நிதி வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு தளமாக செயல்படுகிறது, இதன் மூலம் அவர்கள் எங்களின் நிதித் திட்டமான அப்னா கர் ட்ரீம்ஸ் - மலிவு வீட்டு கடனைப் பெற குறைந்த வருமானம் கொண்ட மக்களைப் பரிந்துரைக்க முடியும்,.

ஐசிஐசிஐ எச்எஃப்சி இல் ஏற்கனவே நிலையான வைப்பு நிதி வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் வெகுமதிகளைப் பெறத் தகுதி பெற்றவர்கள் ஆவர்..

எங்களின் நிதிப்பொருளான அப்னா கர் ட்ரீம்ஸ் - ஒரு மலிவு வீட்டுக் கடன் இன் ஒவ்வொரு வெற்றிகரமான பரிந்துரைக்கும் Rs 5,000 மதிப்புள்ள ஒரு கூப்பனை வெல்வீர்கள்.

மேலே குறிப்பிட்டுள்ள படிவத்தில் உங்கள் விவரங்களையும் பரிந்துரைக்கப்படும் நபரின் விவரங்களையும்  பூர்த்தி செய்யலாம்.

 

இல்லை

இல்லை