கண்ணோட்டம் - தங்க நகைக் கடன்

உங்களின் திட்டங்கள் மிக சிறப்பாக இருந்தாலும் சில சங்கடங்கள் வந்து கொண்டே இருக்கும். அது மருத்துவ அவசர நிலையாகவோ அல்லது உங்கள் தொழிலுக்கான அவசர பணத் தேவையாகவோ இருக்கலாம். எங்கள் தங்க நகைக் கடன்கள் உங்கள் கடன் காலம் முழுவதும் வட்டி வீதத்தில் இருப்பதால் இவை உங்கள் குறுகிய கால பணத் தேவைகளுக்கு எங்கள் தங்க நகைக் கடன் செளகரியமானதாக இருக்கலாம்.

இது எளிமையானது, விரைவானது மற்றும் பாதுகாப்பானது. உங்களுக்கு அருகேயுள்ள ICICI HFC கிளைக்கு சென்று உங்கள் தேவைக்கு உடனே நிதி பெறுங்கள்

சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள் - தங்க நகைக் கடன்

விரைவான வழங்குதல்

நீங்கள் உங்கள் அருகேயுள்ள ICICI HFC கிளைக்கு ஒருமுறை சென்றால் போதும். எங்கள் ICICI HFC கிளைகளில் உங்கள் முன்னிலையில் மதிப்பீடு செய்யும் தங்க மதிப்பீட்டாளர்கள் உள்ளதால் நீங்கள் 30 நிமிடங்களில் தங்க நகைக் கடன் பெறலாம். அதே கிளையில் உள்ள எங்கள் பிசினெஸ் டீம் அந்த இடத்திலேயே உங்கள் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து கடனை வழங்குகிறது.

மாறாத வட்டி வீதங்கள்

ICICI HFC தங்க நகைக் கடன் மூலம் உங்கள் கடன் காலத்தில் உங்கள் வட்டி வீதம் எப்போதும் மாறாது. வட்டி வீதம் ஆண்டுக்கு 13% முதல் 17% வரை உள்ளது.

செளகரியமான திருப்பிச் செலுத்தும் வாய்ப்புகள்

  • கடன் காலத்தில் எப்போது வேண்டுமானாலும் திருப்பிச் செலுத்தலாம்
  • காலம் முடிவில் (புல்லட் ரீபேமென்ட்) வட்டி உட்பட முழுமையாக செலுத்தலாம்

வளைந்து கொடுக்கும் கடன் தொகை

எங்கள் தங்க நகைக் கடன் ரூ. 10,000 முதல் ரூ.10 லட்சம் வரை கிடைக்கிறது. நீங்கள் ஏற்கனவே உங்களிடம் உள்ள சொத்தின் மீது அவசரத் தேவைகளுக்காக கடன் பெறலாம்.

உங்கள் தங்கத்திற்கான பாதுகாப்பு

உங்கள் அருகேயுள்ள ICICI HFC கிளையில் நீங்கள் அடகு வைக்கும் தங்கம் உங்கள் முன்னிலையில் மூடி சீல் வைக்கப்படும். உங்கள் தங்க நகை கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதற்காக அது கவனமாக உயர்தர பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து எப்போதும் பாதுகாக்கப்படும்.

ஏன் ICICI HFCயிலிருந்து கடன் பெற வேண்டும்?

எங்களது பல கிளைகளிலும் தங்க நகையை மதிப்பிடும் நிபுணர் உள்ளதால், நீங்கள் வெறும் 30 நிமிடங்களில் கடன் பெறுவதை உறுதிப்படுத்துகிறோம்.

நீங்கள் ICICI HFC கடன் திட்டத்தை தேர்வு செய்யும்போது, நீங்கள் ICICI HFC குடும்பத்தின் உறுப்பினர் ஆகிறீர்கள். நீங்கள் ஏற்கனவே ICICI HFCயின் வாடிக்கையாளராக இருப்பதால், ஏற்கனவே பல சரிபார்ப்பு செய்யப்பட்டிருக்கும் என்பதால் உங்கள் விண்ணப்பம் விரைவில் செயல்முறை செய்யப்படும். உங்களுக்கு உடனே தங்க நகைக் கடன் கொடுக்கப்படும். நீங்கள் உங்கள் வீட்டில் முதலீடு செய்ய அல்லது உங்கள் தொழிலை விரிவுபடுத்த அல்லது உங்கள் சேமிப்புகளை அதிகரிக்கவும் நீங்கள் கடன் பெறலாம்.

உங்களுக்கு அருகேயுள்ள ICICI HFC கிளைக்கு வருவதன் முக்கிய பயன் விசேஷ சலுகைகள் ஆகும். நீங்கள் எங்கள் கிளைகளில் தள்ளுபடி செய்த வீதங்கள் மற்றும் பலவகை சலுகைகளைப் பெறலாம். நீங்கள் உங்களுக்கு உதவும் சலுகையைப் பெற வேண்டும் என்பதால் எங்கள் கிளைகளில் உள்ள நிபுணர்கள் ஒவ்வொரு கிடைக்கும் ஒவ்வொரு சலுகையின் பயன்கள் பற்றி விவரிப்பார்கள்.

தகுதி - தங்க நகைக் கடன்

நீங்கள் ICICI HFC தங்க நகைக் கடன் பெறத் தகுதி பெற நீஙகள் கண்டிப்பாக சில அடிப்படை விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

·         நீங்கள் கண்டிப்பாக இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்

·         குறைந்தது 25 வயதுள்ளவராக இருக்க வேண்டும்

·         நீங்கள் ஈஎம்ஐ செலுத்திக் கொண்டிருக்காமல் உங்கள் பொன்னான ஆண்டுகளை அனுபவிக்க வேண்டும் என்பதால் கடன் முதிர்ச்சி அடையும்போது உங்கள் வயது 70 கடக்கக் கூடாது.

·         நீங்கள் ஒரு தனிநபராக இருக்க வேண்டும் (எங்கள் தங்க நகைக் கடன் தனிநபர் அல்லாதவர்களுக்கு கிடைக்காது)

விண்ணப்பிக்கும் விதம்

நீங்கள் தங்க நகைக் கடனுக்கு விண்ணப்பித்து கடன் அங்கீகரிக்கப்பட சில நிமிடங்கள் போதும். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு அருகேயுள்ள ICICI HFC கிளைக்கு வந்து உங்கள் தங்க நகையை அடகு வையுங்கள்.

ஒவ்வொரு கிளையிலும் உள்ள தொழில்முறை மதிப்பீட்டாளர் தங்க விலையின் அடிப்படையில் உங்கள் தங்கத்தை மதிப்பிட்டு உங்கள் தங்க நகைகள் எவ்வளவு மதிப்புக் கொண்டவை என்று மதிப்பீடுவர்.

தங்க நகைக்குத் தேவையான ஆவணங்கள்

ICICI HFCயில் தங்க நகைக் கடனுக்கு விண்ணப்பித்து உங்கள் கிளை அருகேயுள்ள ஆவணங்களை எடுத்துச் செல்வதை உறுதி செய்யுங்கள்.

  • கேஒய்சி ஆவணங்கள் (அடையாள ஆதாரம் மற்றும் முகவரி ஆதாரம்)
  • பான்/ படிவம் 60
  • புகைப்படம்
  • ரத்து செய்த வெற்று காசோலை

பொறுப்புத் துறப்பு

  • இங்கே கொடுக்கப்பட்டுள்ள வீதங்கள், கட்டணங்கள் அவ்வப்போது ICICI ஹோம் பைனான்ஸின் தனி விவேகத்தின்படி மாற்றப்படுவதற்கு/ திருத்தப்படுவதற்கு உட்பட்டவை.

Benefits of ICICI HFC Gold Loan

 

தங்க நகைக் கடன் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ICICI HFC உங்களுக்கு வழங்கும் முக்கிய பயன்கள் நிலையான வட்டி வீதமாகும். இது உங்கள் கடன் காலம் முழுவதுமாக மாறாமல் இருக்கும்.

நீங்கள் உங்கள் காலம் முடியும் முன்பாகவே உங்கள் கடனை திருப்பிச் செலுத்தலாம். இவ்வாறு மேலும் வட்டி செலுத்துவதை சேமிக்கலாம்.

உயர்தர சிறப்பம்சங்களைக் கொண்ட பெட்டகம் எப்போதும் உங்கள் தங்க நகை கண்காணிப்பின் கீழாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது.

  • குறைந்தபட்சம் 13% வட்டி
  • அதிகபட்சம் 17% வட்டி
  • கடன் தொகையின்படி செயல்முறைக் கட்டணம் 0.25% முதல் 1% ஆக இருக்கும்

ஒவ்வொரு ICICI ஹோம் பைனான்ஸ் கிளையிலும்,உங்கள் தங்கத்தின் சுத்தத்தை மதிப்பிட தொழில்முறை மதிப்பீட்டாளர் இருக்கிறார். இந்த மதிப்பு அந்த நாளில் நடப்பில் உள்ள ஒவ்வொரு கிராமுக்கான மதிப்பாக கருதப்பட்டு உங்கள் தங்க நகையின் மதிப்பு கணக்கிடப்படும்.

நீங்கள் ஆன்லைனில் நிதியை அனுப்பி உங்கள் கடனை செலுத்தலாம். நீங்கள் உங்கள் கடனை உங்கள் காலம் முடியும் முன்பாகவே செலுத்த முடியும் என்றால் நீங்கள் வட்டி செலுத்துவதை சேமிக்கலாம் என்பதால் உங்கள் கடன் செலுத்தப்பட்டதும் உங்கள் தங்க நகைகள் விடுவிக்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் 6% அபராத வட்டி விதிக்கப்படும். உங்கள் கடனை திருப்பிச் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் அதனை செலுத்த வேண்டும்.

ஆமாம், நீங்கள் எந்த வித கட்டணங்கள் இல்லாமலேயே உங்கள் கடனை முன்னதாக செலுத்தலாம்.

இல்லை

எப்போதும் உங்கள் தங்கம் கண்காணிப்பில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக உங்கள் தங்க நகைகளை நாங்கள் சேமித்து வைக்கும் பெட்டகம் பலவகை உயர்தர சிறப்பம்சங்களைக் கொண்டது.

இல்லை

நீங்கள் குறைந்தபட்சம் ரூ.10,000 தங்க நகைக் கடன் பெறலாம். தனிப்பட்டதோ அல்லது தொழில் தொடர்பானதோ தங்க நகைக் கடன் விரைவாக மற்றும் எளிய வழியில் அவசர பணத் தேவைகளுக்கான மனக் கவலையைப் போக்கலாம். சில மணிநேரங்களில் உங்களுக்குத் தேவையான பணத்தை ஏற்பாடு செய்யலாம்.