சம்பளதாரருக்கான மலிவான வீட்டுத் திட்டம் - கண்ணோட்டம்

அப்னா கர் (சொந்த வீடு) என்பது பிற வீட்டுக் கடனைப் போல் அல்லாமல் நீங்கள் இதுவரை அறிந்திராத ஒன்று. நீங்கள் ஒரு சிறு மற்றும் நடுத்தர நிறுவனத்தில் பணிபுரிகிறீர்களா அல்லது குடும்ப அல்லது உரிமையாளர் வணிக ஸ்தாபனத்தில் பணிபுரிகிறீர்களா அல்லது எல்.எல்.பி. -யா; நீங்கள் ஒரு உற்பத்தி பிரிவின் தளத்தில் பணிபுரிகிறீர்களா அல்லது ஒரு அலுவலகத்தில் பணிபுரிகிறீர்களா அல்லது பாதுகாப்பு சேவை நிறுவனத்தில் பணிபுரிகிறீர்களா, எதுவாக இருந்தாலும், அப்னா கர் உங்களுக்காக.

ICICI HFCயின் அப்னா கர் உங்களுக்கு பிரதம மந்த்ரி ஆவாஸ் யோஜ்னாவின் (PMAY) கீழ் வீட்டுக் கடன்களுக்கு ₹ 2.67 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. உங்கள் கனவு இல்லம் உங்களைக் கோட்டை சமுதாயம், கிராம பஞ்சாய்த்துக்கள் மற்றும் முறைப்படுத்தப்பட்ட குடியிருப்புகள் ஆகிய எங்கு கொண்டு சென்றாலும் நாங்கள் உங்களை ஆதரிப்போம். முறையான ஐடிஆர் சான்று போன்றவற்றை உங்களால் ஏற்பாடு செய்ய முடியாவிட்டாலும் நங்கள் உங்களை ஆதரிப்போம். கடந்த காலத்தில் ஒரு வீட்டுக் கடனைப் பெற கடினமாக இருந்திருந்தாலும், ஒன்றை உங்களால் பெற முடியும் என்ற நம்பிக்கையே இல்லாமல் இருந்தாலும், நாங்கள் உங்களை ஆதரிப்போம்.

எங்கள் 135+ ICICI HFCயின் ஒவ்வொரு கிளைகளிலும், நட்பு பாராட்டும், உதவிக்கரம் நீட்டும் கிளை அளவிலான வல்லுநர்கள் ஒரு கடனை பெறும் செயல்முறையைப் பற்றிய உங்கள் எண்ணத்தை மாற்றுவார்கள்.

சம்பளதாரருக்கான அப்னா கர்ரின் முக்கிய அம்சங்கள் & பயன்கள்

சுலப தகுதி

நெகிழ்வான தகுதி விதிமுறைகளினாலும் அடிப்படை ஆவணத் தேவையின் காரணமாகவும் அப்னா கர் மூலம் ஒரு வீட்டுக் கடனைப் பெறுவது துரிதமானது. முறையான ஐடிஆர் சான்று போன்றவை உங்களிடம் இல்லாமல் இருந்து ஆனால் கடனை திருப்பிக் கட்டும் சிறந்த முன்வரலாறு இருந்தால் உங்களுக்குத் தேவையான ஆதரவை எங்கள் கிளைவல்லுநர்கள் அளிப்பார்கள்.

குறிப்பு: நீங்கள் உங்கள் தகுதியை அதிகரிக்க வேண்டும் என்றால் உங்கள் துணைவர் அல்லது அடுத்த குடும்ப உறுப்பினர் ஆகிய சம்பாதிக்கும் ஒரு இணை விண்ணப்பதாரரை சேர்க்க வேண்டும்.

எல்லோருக்கும் வீடு

வருமானப் பிரிவுகளைத் தாண்டி வீடு வாங்குவோருக்கு அப்னா கர் உதவி செய்கிறது. நீங்கள் ஒரு மளிகைக்கடை முதலாளி, ஒரு முடிதிருத்துநர், ஒரு பழைய பொருள் கடை உரிமையாளர், அல்லது சில ஆண்டுகளாக நடைபெற்றுவரும் வேறு ஏதாவது வணிக உரிமையாளர் இப்படி நீங்கள் யாராக இருந்தாலும் சரி நீங்கள் ஒரு சொந்த வீட்டு உரிமையாளர் ஆக அப்னா கர் உங்களுக்கு வாய்ப்பை வழங்குகிறது.

துரித கடன் வழங்கல்

உங்கள் கடனை வழங்க 72 மணி நேரத்துக்குக் குறைவாகவே ஆகிறது. இதற்குக் காரணம் ICICI HFCயின்  135+ கிளைகளில் இருக்கும் சட்ட மற்றும் நுட்ப வல்லுநர்கள் அணியே. இருக்கும் இடத்திலேயே உங்கள் விண்ணப்பத்தை மீள்பார்வை செய்து உங்கள் கேள்விகளுக்கு முகத்துக்கு முகம் பதிலளிப்பார்கள். இதனால் பலமுறை வருகைபுரிய வேண்டிய தேவை இல்லை.

ICICI HFCக்கு மாறுதல்

ஆண்டுக்கு 11 % வட்டி வீதத்துக்கும் மேலாக 2-3 ஆண்டுகளாக ஒரு வீட்டுக்கடனைத் திருப்பி செலுத்தி வருகிறீர்கள். உங்கள் வீட்டுக்கடன் வட்டி குறைந்த பட்சம் 50 அடிப்படை புள்ளிகள் எங்களை விட அதிகமாக இருந்தால் எங்கள் இருப்பு மாற்றல் வசதியின் மூலம் ICICI HFCக்கு மாறவும்.  இதனால் உங்கள் மாதத் தவணைப் பளு குறையும். ஒப்பீட்டளவில் குறைந்த வட்டி வீதத்தைப் பெற்றும் மகிழுங்கள் மேலும் எங்கள் வல்லுநர்களிடம் இருந்து முழுக்கவனத்தையும் பெறுங்கள்.

பல்வேறு நிலைகளில் வீடுகள்

நீங்கள் ஒரு பெருநகரத்தின் நடுவில், அல்லது அதன் எல்லையோரங்களில் வாழ்ந்தாலும் உங்கள் வேலை விவரம், தேர்ந்தெடுத்த சொத்து மற்றும் அதன் இருப்பிடத்தைப் பொறுத்து நீங்கள் ₹ 20 லட்சம் வரை (சம்பளதாரர்) அல்லது ₹ 50 லட்சம் வரை (சுயதொழில் முனைவோர்) வீட்டுக்கடனைப் பெறலாம். சுயமாக கட்டப்பட்ட ஒரு சொத்து அல்லது உங்களுக்கு உரிமையான ஒரு மனையில் வீட்டைக் கட்ட அல்லது முறைப்படுத்தப்பட்ட குடியிருப்புகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் ஒரு குடியிருப்பு வீட்டுக்கு மறுநிதியளித்தல் ஆகியவற்றிற்கான ஒரு கடனைப் பெறலாம்.

சம்பளதார ருக்கு அப்னா கர்க்கான தகுதி

 • நாடு

இந்தியாவில் வாழும் இந்தியர்

 • வயது

குறைந்தது 25 வயதில் இருந்து அதிகபட்சம் 60 வரை (நீங்கள் 60 வயது ஆகும் முன் அல்லது உங்கள் பணிமூப்பு வயது இவற்றில் எது முந்தியதோ அதற்குள் முடிவடையும் ஒரு காலவரையறையைத் தேர்வுசெய்யவும். இதனால் ஓய்வு பெற்ற பின் நீங்கள் தவணை கட்டத் தேவை இல்லை)

 • தகுதியான வேலை விவரம்

தனிஉரிமை, கூட்டுரிமை, எல்.எல்.பி அல்லது தனியார் அல்லது பொதுத்துறை நிறுவனங்கள், எம்.என்.சிக்களில் பணிபுரிபவர்.

 • வட்டி வீதம்

நீங்கள் உங்களுக்கு ஒரு சொந்த வீட்டை வாங்க முடியும் என்று நாங்கள் உங்களுக்கு உறுதி அளிக்கிறோம். எங்கள் தற்போதைய வீட்டுக்கடன் வட்டி வீதம் ஆண்டுக்கு 11.50% இல் இருந்து தொடங்குகிறது (ரொக்க சம்பளம் வாங்குபவர் 14% இல் இருந்து)

 • இணை உரிமை சொத்து

உங்கள் சொத்துக்கு இரண்டு அல்லது அதிகமானோர் உரிமை உடையவராக இருந்தால், உங்கள் கடனுக்கு இணை உரிமையாளரும் இணை விண்ணப்பதாரராக இருக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் சொத்து பாதுகாக்கப்படுவதோடு இரு உரிமையாளரும் பயனடையலாம்.

இணை விண்ணப்பதாரர்

 • வயது

18-80 வயது

 • நீங்கள் ஏன் ஒரு இணை விண்ணப்பதாரரரை சேர்க்க வேண்டும்?

 • நீங்கள் உங்கள் வீட்டுக் கடன் தகுதியை அதிகரிக்க வேண்டும் என்றால் இணை விண்ணப்பதாரர்களை சேர்க்க வேண்டும்; அவர்கள் சம்பாதிக்காவிட்டாலும் பரவாயில்லை. இதன் மூலம் கூடுதல் வீட்டுக் கடன் பெறவும் நீங்கள் தகுதி பெறுகிறீர்கள். இணை விண்ணப்பதாரர் உங்கள் துணைவர் அல்லது குடும்ப உறுப்பினராக இருக்கலாம்.

 • பெண் இணை விண்ணப்பதாரர் வீட்டுக்கடனுக்கு குறைந்த வட்டி வீதம் பெறலாம்

ICICI HFCயில் இருந்து ஒரு கடனை ஏன் பெற வேண்டும்?

இல்லாதவர்களுக்கும் அப்னா கர் என்பது இந்த வகையில் முதல் வீட்டுக்கடன் திட்டம் ஆகும். நாங்கள் ஒரு வீட்டை உரிமையாகப் பெற வேண்டும் என்ற உங்கள் கனவை ஆதரிப்பதால் நாங்கள் அப்னா கர் போன்ற தயாரிப்புகளை உருவாக்குகிறோம்.

நீங்கள் 72 மணி நேரத்துக்குள் ஒரு கடனைப் பெறமுடியும் . இதற்குக் காரணம் ICICI HFCயின்  135+ கிளைகளில் இருக்கும் சட்ட மற்றும் நுட்ப வல்லுநர்கள் இருக்கும் இடத்திலேயே திரும்பத் திரும்ப ஆவணங்களைக் கேட்காமல் உங்கள் விண்ணப்பத்தை மீள்பார்வை செய்வார்கள். நீங்கள் உங்கள் கடன் செயல்முறையை தொடங்க அருகில் உள்ள ICICI கிளைக்கும் செல்லலாம்.

உங்களுக்கு அருகில் இருக்கும் ICICI HFC கிளைக்கு செல்வதன் நன்மை என்னவென்றால் கிடைக்கும் சிறப்பு சலுகைகள்தான். எங்கள் கிளை அளவிலான வல்லுநர்கள் ஒவ்வொரு சலுகையின் நன்மைகளுக்குள்ளும் உங்களை வழி நடத்துவார்கள். ஆகவே அது உண்மையில் உங்களுக்கு உதவிகரமாக இருப்பதை காண்பீர்கள். சென்று இந்த நாளின் பயனை அடையுங்கள்.

எங்கள் கிளை அளவிலான வல்லுநர்கள் உங்கள் வீடு வாங்கும் பயணத்தின் ஒவ்வொரு படியிலும் உங்களுக்கு உதவுவார்கள். அவர்கள் உங்கள் மொழியில் பேசுவார்கள் மேலும் உங்கள் பகுதியை நன்கு அறிந்தவர்கள். உங்களுக்குத் தேவையான நிதியை பெற்றுத் தர அவர்கள் உறுதிபூண்டிருக்கிறார்கள். உங்கள் அருகில் இருக்கும் கிளைக்கு சென்று ஒரு நட்பு முகத்தை சந்தியுங்கள்.

எங்களிடம் இருந்து ஒரு கடனை நீங்கள் பெறும்போது நீங்கள் ICICI HFC குடுபத்தின் ஒரு பகுதி ஆகிறார்கள். ICICI HFCயின் தற்போதைய வாடிக்கையாளராக நீங்கள் இருப்பதால், உங்கள் ஆவணங்கள் எங்கள் கணினியில் ஏற்கெனவே இருக்கும். இதனால் உங்கள் விண்ணப்பம் துரிதாமாக மீள்பார்வை செய்யப்படும். இன்று உங்களுக்கு ஒரு வீட்டுக் கடன், நாளை ஒரு தங்க கடன்  தேவைப்பட்டாலும், அல்லது உங்கள் சேமிப்பை வளர்க்க ஒரு நிலை வைப்பு தேவைப்பட்டாலும் நாங்கள் உங்களுக்கு உதவ முடியும்.

எங்கே விண்ணப்பிப்பது

எங்களது 135+ ICICI HFC கிளைகளில் ஒன்றுக்கு உதவிக்காக செல்லுங்கள். எங்கள் கிளை அளவிலான வல்லுநர்கள் துரித மற்றும் சுலப வீட்டுக் கடன் விண்ணப்பத்தை செயல்முறைப் படுத்தலில் உங்களுக்கு உதவி செய்து உங்கள் கடனை 72 மணி நேரத்துக்குள் நீங்கள் பெறச் செய்வார்கள். உங்களுக்கு அருகில் உள்ள ICICI HFC கிளையை இன்றே தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு அருகில் ICICI HFC கிளை இல்லை என்றால் அருகில் இருக்கும் ICICI கிளைக்கு சென்று உங்கள் கடன் விண்ணப்பத்தின் செயல்முறையைத் தொடங்குங்கள்.

எங்களை நீங்கள் 1800 267 4455 என்ற எண்ணிலும் அழைக்கலாம்.

எப்படி விண்ணப்பிப்பது

 1. தேவைப்படும் ஆவணங்களுடன் 10 நிமிடங்களில் உங்கள் கடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். 
 2. KYC சரிபார்ப்புக்காக உள்நுழைவு கட்டணமாக  ₹ 3000 + GST @ 18% (திருப்பிப் பெற முடியாத ) செலுத்துங்கள்.
 3. உங்கள் தற்போதைய மாதத் தவணைகள், வயது, வருமானம், மற்றும் சொத்து விவரத்தை ஆராய்ந்து எங்கள் வல்லுநர் அணி உங்கள் விண்ணப்பத்தை விரைவாக மீள்பார்வை செய்யும்.
 4. ஒவ்வொரு ICICI HFCகிளைகளிலும் இருக்கும் எங்கள் வல்லுநர்களால் கடன் தொகை அனுமதியைப் பெறுங்கள்.
 5. கடன் தொகையின் 1% இணையான செயல்முறை கட்டணம் அல்லது ₹ 11000 + ஜிஎஸ்டி@18%  இதில் எது அதிகமோ அதனை செலுத்தவும்.
 6. உங்கள் சொத்தின் கட்டுமான நிலைக்கு ஏற்ப அனுமதிக்கப்பட்ட கடன் வழங்கப்படும்.

இன்னும் நீங்கள் முழுமையான வீட்டை தேடிக்கொண்டிருந்தால், எங்களது எளிதாக பயன்படுத்தக்கூடிய சொத்து தேடல் இணைய தளத்தைப் பயன்படுத்தி உங்கள் செலவுதிட்டத்துக்குள் இருக்கும் ஒரு வீட்டை கண்டடையுங்கள்.

PMAY மானிய கால்குலேட்டர்

நீங்கள் பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜ்னாவுக்கு (PMAY) நீங்கள் தகுதியுடையவரா என்று கண்டறியுங்கள் மற்றும் உங்களுக்கு எவ்வளவு மானியம் கிடைக்கும் என்பதை PMAY மானிய கால்குலேட்டரின் மூலம் கண்டறியுங்கள்.

அரசின் எந்த ஒரு வீட்டுவசதி திட்டத்தில் இருந்தாவது அல்லது PMAYயின் கீழ் நன்மையை மத்திய அரசின் உதவியின் கீழ் பெற்றுள்ளீர்களா?
இதுதான் உங்களது முதல் முழுமையான வீடா?
மொத்தக் குடும்ப ஆண்டு வருமானத்தை உள்ளிடுக
Thirty Thousand
கடன் தொகை
Ten Lakhs
கடன் கால அளவை (மாதங்கள்) உள்ளிடுக
8 year's and 1 month
மாதங்கள்

PMAY Subsidy Amount

0


மானிய வகை

EWS/LIG

மாதத் தவணையில் நிகர குறைப்பு

நிகர குறைப்பு மதிப்பு

கீழே உள்ள விவரங்களை நிரப்பவும்

தயவுசெய்து உங்கள் முழுப்பெயரை உள்ளிடவும்
தயவுசெய்து உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடவும்
தயவுசெய்து கடன் தொகையை உள்ளிடவும்
தயவுசெய்து மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும்
உங்கள் நகரத்தைத் தேர்வு செய்க
தயவுசெய்து விதிமுறைகள் & நிபந்தனைகளை ஏற்கவும்

சம்பளதாரர்களுக்கான அப்னா கர்க்கு தேவைப்படும் ஆவணங்கள்

பலமுறை செல்வதற்கு தேவையில்லாமல் இந்த ஆவணங்களை சமர்ப்பித்து 72 மணிநேரத்தில் உங்கள் கடன் அனுமதியைப் பெறுங்கள்

 • நீங்கள் கையொப்பம் இட்ட முழுதாக நிரப்பிய விண்ணப்பம்
 • ஆதார் , பான் அட்டை, வாக்காளர் அட்டை, NREGA வழங்கிய வேலை அட்டை போன்ற அடையாளம் மற்றும் குடியிருப்பு சான்று (KYC) 
 • சமீபத்திய 2 மாத சம்பள அறிக்கை, சமீபத்திய படிவம் 16, மூன்று மாத வங்கி கணக்கு அறிக்கை போன்ற வருமான சான்று
 • சொத்து ஆவணங்கள் (நீங்கள் இன்னும் ஒரு சொத்தை இறுதிப்படுத்தியிராவிட்டால்)

சம்பளதாரர்களுக்கான அப்னா கர்க்கான வீதங்கள் மற்றும் கட்டணங்கள்

நாங்கள் எங்கள் வீதங்கள் மற்றும் கட்டணங்களில் வெளிப்படையாக இருப்பதை முக்கியமாகக் கருதுகிறோம்.

கட்டண வீதங்கள்*
உள்நுழைவு கட்டணம் (KYC சரிபார்ப்புக்காக) ₹ 3000 + 18% GST*
செயல்முறை /நிர்வாகக் கட்டணம் (அனுமதிக்கும் நேரத்தில் வசூலிக்கப்படும்) கடன் தொகையின் 1% அல்லது ₹ 11,000 அல்லது + GST @18% இதில் அதிகமானது.
முன்செலுத்துதல் கட்டணங்கள் (தனிநபர் அல்லதவருக்கு மட்டும்)

கடன் கால வரையறை எதுவாக இருந்தாலும் நீங்கள் முழு அல்லது பகுதி வீட்டுக் கடனையும் செலுத்த முடியுமானால், முழு அல்லது பகுதி வீட்டுக் கடனை செலுத்துவதை வசதிப்படி தேர்வு செய்யலாம்.


முன்செலுத்துதலுக்கு நாங்கள் குறைந்தபட்சமாக 0-2% கட்டணம் விதிக்கிறோம்.

இந்த சதவீதங்களில் பொருந்தும் வரிகள் மற்றும் சட்ட பூர்வ வரிவிதிப்புகள் அடங்கவில்லை, ஏதாவது இருந்தால்கொடுக்கப்பட்டுள்ள நிதி ஆண்டில் முன்செலுத்தப்பட்ட அனைத்து தொகையும் இந்தத் தொகையில் அடங்கும்

இந்த கட்டணங்களுக்கு மேலாகவும் அதிகமாகவும் தற்போதைய வீதத்தில் பொருட்கள் மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) மற்றும் பிற அரசு வரிகள் பொருந்தும்.

பொறுப்பு துறப்பு:

மேற்குறிப்பிடப்பட்டுள்ள வீதங்கள், கட்டணங்கள் ICICI வீட்டுக் கடன் நிறுவனத்தின் முழு விருப்புரிமைக்கு ஏற்ப அவ்வப்போது மேற்கொள்ளப்படும் மாற்றங்கள்/ திருத்தங்களுக்கு உட்பட்டவை.

ICICI வீட்டுக் கடனின் பின்வரும் மிதக்கும் வட்டி வீதம் ICICI வீட்டுக் கடன் பிரைம் லெண்டிங் வீதத்துடன் (IHPLR) இணைக்கப்பட்டுள்ளது.

வழிகாட்டும் நோக்கத்துக்காகவே கால்குலேட்டர் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு வழங்கல் அல்ல மேலும் அதன் முடிவுகள் உண்மை நிலையில் இருந்து மாறுபடலாம்.

அப்னா கர் பற்றி அடிக்கடி கேட்கும் கேள்விகள்

2022 க்குள் அனைவருக்கும் வீட்டுவசதி’ என்ற அதன் நோக்கத்திற்கு ஏற்ப, குறைந்த வருமானம் உள்ளவர்கள் வீடு வாங்க உதவும் வகையில் பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜ்னா (பிஎம்ஏவி) வின் கீழ் மலிவு விலை வீடுகள் அல்லது குறைந்த விலை வீட்டுத்திட்டத்தை இந்திய அரசு தொடங்கியுள்ளது.

நகர்ப்புறத்தில் வீட்டை வாங்குவதற்காக/ கட்டுவதற்காக (மறு கொள்முதல் உட்பட) பெற்ற வீட்டுக் கடனுக்கான வட்டி மானியம் மலிவான வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகளில் அடங்கும். மானிய நன்மை ஒருவரின் வருமானம் மற்றும் வாங்க வேண்டிய வீடு / சொத்தின் அளவைப் பொறுத்தது.

வெவ்வேறு மக்களுக்கு வெவ்வேறான நிதித் தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் இருப்பதை ஐசிஐசிஐ வீட்டுக்கடன் வசதி நிறுவனத்தில் நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஐசிஐசிஐ எச்எஃப்சி அப்னா கர் வீட்டுக் கடன் மூலம், நீங்கள் 20 ஆண்டுகளுக்கு அப்பாலும் நீண்ட திருப்பிச் செலுத்தும் கால அளவைத் தேர்வுசெய்யலாம். இது உங்கள் ஈஎம்ஐ சுமையைக் குறைக்க உதவும். இருப்பினும், மானிய நன்மை அதிகபட்சமாக 20 ஆண்டுகளுக்கு எனக் கட்டுப்படுத்தப்படும்

மலிவான வீட்டுக் கடனுக்கு கட்டாயமாகக் கட்டவேண்டிய குறைந்தபட்ச முன்கட்டும் பணம்,   வீடு / சொத்தின் மொத்த விலையில் 20 சதவீதம் ஆகும்.

இவ்வாறு, நீங்கள் ரூ 30 லட்சம் மதிப்புள்ள வீட்டை வாங்க முடிவு செய்து, குறிப்பாக மலிவான வீட்டுத் திட்டங்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஐசிஐசிஐ எச்எஃப்சி அப்னா கர் வீட்டுக் கடனைப் பெற முடிவு செய்தால், நீங்கள் வீட்டின் விலையில் 20 சதவீதமான ரூ .6 லட்சத்தைக்  குறைந்தபட்ச முன்கட்டும் பணமாகச் செலுத்த வேண்டும், 

ஐசிஐசிஐ எச்எஃப்சி அப்னா கர் போன்ற மலிவான வீட்டுக் கடனை ஒரு குடியிருப்பு யூனிட்டை வாங்குவதற்கு / கட்டுவதற்கு / மேம்படுத்துவதற்குப் பெறலாம். மேம்பாடுகளில், உங்களது தற்போதைய வீட்டிற்குக் கூடுதல் தளம் அல்லது கழிப்பறை கட்டுவது போன்ற மேம்படுத்தல்கள் அடங்கும். மலிவான வீட்டுக் கடனின் கீழ் ஒரு வீடு / சொத்தை மறு கொள்முதல் செய்யவும் அனுமதிக்கப்படுகிறது

ஐசிஐசிஐ எச்எஃப்சியின் அப்னா கர் ஹோம் லோன் எளிதில் வாங்கத் தக்க கடனை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கானது. அப்னா கர் ஹோம் லோன் மூலமாக வாங்கக் கூடிய அதிகபட்ச கடன் தொகை ரூ.30 லட்சம் ஆகும். நீங்கள் தேர்வு செய்யப்பட்ட பெருநகரங்களில் வீடு வாங்குவதாக இருந்தால் கடன் தொகை ரூ.1 கோடி வரை கிடைக்கும்.

அப்னா கர் ஹோம் லோன் பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜ்னாவின் (பிஎம்ஏஒய்)நீட்டிப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இது உங்களுக்கு ரூ. 2.67 லட்சம் வரை மானியம் வழங்குகிறது.

நீங்கள் சம்பளம் பெறுபவரோ அல்லது சிறு தொழில் செய்பவரோ, அப்னா கர் ஹோம் லோன் திட்டம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வீட்டு உரிமையாளர் ஆகும் வாய்ப்பை தருகிறது. அப்னா கர் என்பதற்கு எல்லா அளவிலான வருமானங்களை கொண்டவர்களுக்கானது என்று பொருளாகும். இது மற்ற வீட்டுக் கடன் திட்டங்களில் உள்ள தடைகளை உடைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. உங்களிம் ஐடிஆர் போன்ற வழக்கமான வருமான ஆதாரம் இல்லாவிட்டாலும் கூட, எங்கள் நிபுணர்கள் உங்கள் வருமானத்தை மதிப்பிட உங்கள் தொழிலின் தன்மையை புரிந்துகொள்ள நேரம் செலவழிப்பார்கள். கடன் தொகை மற்றும் உங்களுக்கு செளகரியமான திருப்பிச் செலுத்தும் காலத்தை நிர்ணயிக்க அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

புதிய மற்றும் ஏற்கனவேயுள்ள எளிதில் வாங்கத் தக்க வீட்டுக் கடன் திட்டங்களுக்கான தற்போதைய ஜிஎஸ்டி வீதம் 1% ஆகும். எளிதில் வாங்கத் தக்க கடன் திட்டம் கீழ்க்கண்டவாறு வரையறுக்கப்படுகிறது:

 • பெருநகரங்களில் (டெல்லி-என்சிஆர், கொல்கத்தா, சென்னை, மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களூர்) 60 சதுர மீட்டர்கள் கார்பெட் ஏரியா கொண்ட வீடுகள்
 • பெருநகரங்கள் அல்லாத பேரூர்களில் 90 சதுர மீட்டர்கள் கார்பெட் ஏரியா கொண்ட வீடுகள்
 • பெருநகரங்கள் மற்றும் பெருநகரங்கள் அல்லாத பேரூர்களில் மொத்த மதிப்பு ரூ.45 லட்சம் கொண்ட வீடுகள்