கண்ணோட்டம் – சுயதொழில் முனைவோருக்கு வீட்டுக் கடன்

வருமானத்துக்கான போதிய சான்று இல்லாததால் கடந்த காலத்தில் வீட்டுக் கடன் வாங்குவது உங்களுக்கு கடினமானதாக இருந்திருந்தால் அல்லது உங்கள் வணிகத் தன்மையின் காரணமாக பிற நிறுவனங்கள் உங்களுக்கு கடன் தர மறுத்திருந்தால், நீங்கள் தனியாக இல்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள். கடன் விண்ணப்ப செயல்முறை சிக்கலானதாக நீங்கள் கண்டால், உங்களுக்கு ஒவ்வொரு படிநிலையிலும் உதவ நாங்கள் இருக்கிறோம். சரியான ஆதரவுடன், ஒரு வீட்டுக்கடனை விரைவாகவும் எளிதாகவும் வாங்கி சிறந்த அனுபவத்தைப் பெறலாம். 

எங்கள் வீட்டுக் கடன் உங்களை மனதில் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளன. நாங்கள் எளிய தகுதி அளவீடுகளை வைத்துள்ளோம் மேலும் குறைந்த மற்றும் சில அடிப்படை ஆவணங்களே தேவை. எங்களது 135+ ஐசிஐசிஐ எச்எஃப்சி கிளைகள் ஒவொன்றிலும் இருக்கும் சட்ட மற்றும் நுட்ப வல்லுநர் அணி  இருக்கும் இடத்தில் உங்கள் விண்ணப்பத்தை மீள்பார்வை செய்வதால் நீங்கள் ஒரு கடனை 72 மணி நேரத்தில் பெற முடியும்.

உங்களுக்கு சொந்த வீட்டைப் பெற வேண்டும் என்ற உங்கள் கனவுக்கும் நடுவில் ஒன்றும் வரக்கூடாது. திருப்பிக் கட்டுவதாக இருந்தாலும் அல்லது எதிர்காலத்தில் உங்களுக்கு எந்த வகையான நிதி தேவைப்பட்டாலும் சரி – கடன் வழங்கிய பின்னும் நாங்கள் உங்களுக்கு உதவிசெய்ய காத்திருக்கிறோம்.

முக்கிய அம்சங்கள் & பயன்கள் - சுயதொழில் முனைவோருக்கு வீட்டுக்கடன்

மலிவான வீட்டுவசதி பயன்கள்

ஐசிஐசிஐ எச்எஃப்சியின் அப்னா கர் உங்களுக்கு பிரதம மந்த்ரி ஆவாஸ் யோஜ்னாவின் (பிஎம்ஏஒய்) கீழ் வீட்டுக் கடன்களுக்கு ₹ 2.67 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. அப்னா கர் பிற வீட்டுக் கடன்களைப் போல் அல்லாமல் சம்பளதாரர்களுக்கும் சம்பளம் வாங்காத தனிநபர்களுக்கும், முறையான வருமான சான்றை ஏற்பாடு செய்ய முடியாதவர்களுக்குமானதாகும்.

வீடு வாங்க விரும்பும் அனைவருக்கும் கடன்கள்

அரசு ஊழியர்கள் மற்றும் பெருநிறுவன தொழில் வல்லுநர்கள் போன்ற மாதச் சம்பளதாரர்களுக்கும் , மற்றும் டாக்டர்கள், வழுக்குரைஞர்கள், சிஏக்கள், வணிகர்கள் மற்றும் சிறு வணிகர்கள் போன்ற சுயதொழில் முனைவோர் ஆகிய இருபாலாரையும் எங்கள் வீட்டுக்கடன் ஆதரிக்கிறது. உங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு என்ற உங்கள் கனவை நனவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

எளிய தகுதி

நெகிழ்வான தகுதி விதிமுறைகளினாலும் அடிப்படை ஆவணத் தேவையின் காரணமாகவும் ஐசிஐசிஐ எச் எஃப்சியில் ஒரு வீட்டுக் கடனைப் பெறுவது துரிதமானது. முறையான ஐடிஆர் சான்று போன்றவை உங்களிடம் இல்லாமல் இருந்து ஆனால் கடனை திருப்பிக் கட்டும் சிறந்த முன்வரலாறு இருந்தால் உங்களுக்குத் தேவையான ஆதரவை எங்கள் கிளைவல்லுநர்கள் அளிப்பார்கள்.

குறிப்பு: நீங்கள் உங்கள் தகுதியை அதிகரிக்க வேண்டும் என்றால் உங்கள் துணைவர் அல்லது அடுத்த குடும்ப உறுப்பினர் ஆகிய சம்பாதிக்கும் ஒரு இணை விண்ணப்பதாரரை சேர்க்க வேண்டும்.

துரித கடன் வழங்கல்

உங்கள் கடனை வழங்க 72 மணி நேரத்துக்குக் குறைவாகவே ஆகிறது. இதற்குக் காரணம் ஐசிஐசிஐ எச்எஃப்சியின்  135+ கிளைகளில் இருக்கும் சட்ட மற்றும் நுட்ப வல்லுநர்கள் அணியே. இருக்கும் இடத்திலேயே உங்கள் விண்ணப்பத்தை மீள்பார்வை செய்து உங்கள் கேள்விகளுக்கு முகத்துக்கு முகம் பதிலளிப்பார்கள். இதனால் பலமுறை வருகைபுரிய வேண்டிய தேவை இல்லை.

வீட்டுக் கடன் ₹ 3 லட்சத்தில் இருந்து ₹ 5 கோடி வரை

உங்கள் தேவை சிறிதோ பெரிதோ நாங்கள் அவற்றிற்காக நிதியுதவி அளிக்கிறோம். பின்வருபவை அனைத்திற்கும் நீங்கள் ஒரு வீட்டுக் கடனைப் பெறலாம்:

 • கட்டுமானத்தின் கீழ் இருக்கும் சொத்து, உரிமை கொள்ளும் நிலையில் இருக்கும் சொத்து அல்லது கட்டுமானக்காரர் சொத்து
 • புதிய சொத்து அல்லது மறுவிற்பனை சொத்து
 • டிடிஏ மற்றும் எம்எச்ஏடிஏ போன்ற மாநில வீட்டுவசதி வாரிய சொத்து அல்லது தற்போதைய கூட்டுறவு வீட்டுவசதி சங்க, அடுக்குமனை உரிமையாளர் சங்க, வளர்ச்சி அதிகாரத் தீர்வை அல்லது தனியார் கட்டுமானக்காரர் சொத்து
 • நகர, முறைப்படுத்தப்பட்ட குடியிருப்பு மற்றும் கிராம பஞ்சாயத்து சொத்துக்கள்
 • பன் அலகு அல்லது சுய கட்டுமான சொத்து அல்லது உங்களுக்கு சொந்தமான மனையில் ஒரு வீட்டைக் கட்ட அல்லது ஒரு குடியிருக்கும் சொத்துக்கு மறுநிதி அளிக்க
 • கட்டற்ற/அடமான மனையில் கட்ட அல்லது வளர்ச்சி அதிகார அமைப்புகளால் வழங்கப்பட்ட மனையில் கட்ட

ஐசிஐசிஐ எச்எஃப்சிக்கு மாறவும்

ஆண்டுக்கு 11 % வட்டி வீதத்துக்கும் மேலாக 2-3 ஆண்டுகளாக ஒரு வீட்டுகடனைத் திருப்பி செலுத்தி வருகிறீர்கள். உங்கள் வீட்டுக்கடன் வட்டி குறைந்த பட்சம் 50 அடிப்படை புள்ளிகள் எங்களை விட அதிகமாக இருந்தால் எங்கள் இருப்பு மாற்றல் வசதியின் மூலம் ஐசிஐசிஐ எச்எஃப்சிக்கு மாறவும்.  இதனால் உங்கள் மாதத் தவணைப் பளு குறையும். ஒப்பீட்டளவில் குறைந்த வட்டி வீதத்தைப் பெற்று மகிழுங்கள். எங்கள் வல்லுநர்களின் கவனத்தையும் குறையாமல் பெறுங்கள்.

தகுதி – சுயதொழில் முனைவோர்க்கு வீட்டுக்கடன்

சுயதொழில் முனைவோர்

 • வயது வரம்பு (பிரதம விண்ணப்பதாரர்)

28-70 வயது (உங்களுக்கு 70 வயது ஆவதற்குள் அல்லது உங்கள் பணிமூப்பு தேதி, இவற்றில் எது முந்தியதோ அதற்கு முன் முடிவடையும் ஒரு காலவரையறையைத் தேர்வுசெய்யவும். நீங்கள் ஓய்வு பெற்ற பின்னர் மாதத் தவணையைக் கட்ட வேண்டாம் என்பதை இது உறுதி செய்யும்)

 • இணை உரிமை சொத்து

உங்கள் சொத்துக்கு இரண்டு அல்லது அதிகப் பேர் உரிமை உடையவராக இருந்தால், உங்கள் கடனுக்கு இணை உரிமையாளரும் இணை விண்ணப்பதாரராக இருக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் சொத்து பாதுகாக்கப்படுவதோடு இரு உரிமையாளரும் பயனடையலாம்.

இணை விண்ணப்பதாரர்

 • குறைந்தபட்ச வயது

18-65 வயது

 • ஒரு இணை விண்ணப்பதாரரை ஏன் நீங்கள் சேர்க்க வேண்டும்?

 • நீங்கள் உங்கள் தகுதியை அதிகரிக்க வேண்டும் என்றால் சம்பாதிக்கும் ஒரு இணை விண்ணப்பதாரரை சேர்க்க வேண்டும். இதன் மூலம் கூடுதல் கடன் பெறவும் நீங்கள் தகுதி பெறுகிறீர்கள். இணை விண்ணப்பதாரர் உங்கள் துணைவர் அல்லது குடும்ப உறுப்பினராக இருக்கலாம்.

 • பெண்களை இணை விண்ணப்பதாரராக சேர்ப்பதை ஊக்குவிக்க பெண்களுக்கு சிறந்த வட்டி விகிதத்தை ஐசிஐசிஐ எச்எஃப்சி அளிக்கிறது. உங்கள் மனைவி அல்லது தாயாரை உங்கள் வீட்டுக் கடனில் சேர்ப்பதன் மூலம், அவர்கள் சம்பாதிப்பவர்களாக இல்லை என்றாலும், நீங்கள் குறைந்த வட்டி வீதத்தைப் பெறுவீர்கள்.

 • உங்கள் சொத்துக்கு ஒன்றுக்கும் மேல் உரிமையாளர்கள் இருந்தால் இருவரும் அல்லது அனைவரும் இணை விண்ணப்பதாரர்களாக இருக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் சொத்து பாதுகாக்கப்படுவதோடு சொத்தில் முதலீடு செய்யப்படுவதில் இருந்து இரு உரிமையாளர்களும் பயன் அடையலாம்.

ஐசிஐசிஐ எச்எஃப்சியில் இருந்து ஒரு கடனை ஏன் பெற வேண்டும்?

நீங்கள் 72 மணி நேரத்துக்குள் ஒரு கடனைப் பெறமுடியும் . இதற்குக் காரணம் ஐசிஐசிஐ எச்எஃப்சியின்  140+ கிளைகளில் இருக்கும் சட்ட மற்றும் நுட்ப வல்லுநர்கள் இருக்கும் இடத்திலேயே திரும்பத் திரும்ப ஆவணங்களைக் கேட்காமல் உங்கள் விண்ணப்பத்தை மீள்பார்வை செய்வார்கள். நீங்கள் உங்கள் கடன் செயல்முறையை தொடங்க அருகில் உள்ள ஐசிஐசிஐ கிளைக்கும் செல்லலாம்.

எங்கள் கிளை அளவிலான வல்லுநர்களை சந்திக்க எங்கள் கிளைகள் ஏதாவது ஒன்றுக்குள் செல்லுங்கள். உங்கள் பயணத்தின் ஒவ்வொரு படியிலும் அவர்கள் உங்களுக்கு உதவ உறுதி பூண்டிருக்கிறார்கள். அவர்கள் உங்கள் மொழியில் பேசுவார்கள் மேலும் உங்கள் பகுதியை நன்கு அறிந்தவர்கள். உங்களுக்கு அருகில் இருக்கும் கிளையைக் கண்டறிய இங்கே கிளிக் செய்யவும். நேருக்கு நேராக சரியான வழிகாட்டுதலைப் பெறவும்.

உங்களுக்கு அருகில் இருக்கும் ஐசிஐசிஐ எச்எஃப்சி கிளைக்கு செல்வதால் கிடைக்கும் முக்கிய நன்மை சிறப்பு சலுகைகள் ஆகும். எங்கள் சொந்த வல்லுநர்கள் ஒவ்வொரு சலுகையின் நன்மைகள் வழியாக உங்களை வழிநடத்துவார்கள். இதனால் உங்களுக்கு ஒரு சிறப்பான பயன் கிடைக்கும்.

நீங்கள் எங்களிடம் இருந்து ஒரு கடனைப் பெறும்போது நீங்கள் ஐசிஐசிஐ எச்எஃப்சி குடும்பத்தின் ஒரு பகுதி ஆகிறீர்கள். அது வெறும் ஒரு கடன் அல்ல, மாறாக ஓர் உறவாகும். ஏற்கெனவே உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு எங்கள் கணினியில் இருப்பதால் ஐசிஐசிஐ எச்எஃப்சியின் தற்போதைய வாடிக்கையாளரான உங்கள் விண்ணப்பம் மிக வேகமாக மீள்பார்வை செய்யப்படும். இன்று உங்களுக்கு ஒரு வீட்டுக்கடன் தேவைப்படலாம் ஆனால் நாளை உங்கள் சேமிப்பை வளர்க்க ஒரு நிலை வைப்பு தேவைப்படும்.

எங்கு விண்ணப்பிப்பது

உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளுக்கும் எங்கள் 135+ ஐசிஐசிஐ எச் எஃஇசி கிளை ஒன்றுக்கு செல்லுங்கள். எங்கள் அயலக வல்லுநர்கள் துரித மற்றும் சுலப கடன் விண்ணப்ப செயல்முறையின் வழியாக உங்களுக்கு உதவி செய்வார்கள். உங்கள் கடனை நீங்கள் வெறும் 72 மணி நேரத்தில் பெற முடியும். உங்களுக்கு அருகில் உள்ள கிளையை அறிய இங்கே கிளிக் செய்யவும். உங்களுக்கு அருகில் ஐசிஐசிஐ எச் எஃஇசி கிளை இல்லை என்றால் அருகில் உள்ள ஐசிஐசிஐ கிளைக்கு சென்று உங்கள் கடன் செயல்முறையைத் தொடங்கவும்.

எவ்வாறு விண்ணப்பிப்பது

 1. தேவைப்படும் ஆவணங்களோடு உங்கள் கடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க 10 நிமிடங்கள் ஒதுக்கவும்.
 2. திருப்பிப் பெற முடியாத ‘விண்ணப்ப’ அல்லது ‘உள்நுழைவு’ கட்டணமாக  ₹ 5000 (+ GST ₹ 900/-@ 18%) கேஒய்சி சரிபார்ப்புக்காக செலுத்துங்கள்
 3. உங்கள் தற்போதைய மாதத் தவணைகள், வயது, வருமானம், மற்றும் சொத்து விவரத்தை ஆராய்ந்து எங்கள் வல்லுநர் அணி உங்கள் விண்ணப்பத்தை விரைவாக மீள்பார்வை செய்யும்.
 4. ஒவ்வொரு ஐசிஐசிஐ எச்எஃப்சிகிளைகளிலும் இருக்கும் எங்கள் வல்லுநர்களால் கடன் தொகை அனுமதியைப் பெறுங்கள்.
 5. கடன் தொகையின் 0.75% அல்லது ₹ 11000 இதில் எது அதிகமோ அதை செயல்முறை கட்டணமாக செலுத்துங்கள். 
 6. உங்கள் சொத்தின் கட்டுமான நிலைக்கு ஏற்ப அனுமதிக்கப்பட்ட கடன் வழங்கப்படும்.

இன்னும் நீங்கள் முழுமையான வீட்டை தேடிக்கொண்டிருந்தால், எங்களது எளிதாக பயன்படுத்தக்கூடிய சொத்து தேடல் இணைய தளத்தைப் பயன்படுத்தி உங்களுக்கு விருப்பமான ஒரு வீட்டை கண்டடையுங்கள்.

சுயதொழில் முனைவோருக்கு வீட்டுக்கடன் – தகுதி கால்குலேட்டர்

எங்கள் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டரைக் கொண்டு உங்களுக்குத் தகுதியுடைய வீட்டுக் கடன் தொகையை அறியவும் நீங்கள் எளிதாக நிறைவு செய்யக் கூடிய நெளிவுசுளிவான அளவுகோல்கள் எங்களிடம் உள்ளன.

உங்கள் வருமானம், வயது மற்றும் தற்போதுள்ள மாதத்தவணைகள் போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு எங்கள் வீட்டுக் கடன் கால்குலேட்டர் உங்களுக்கு கிடைக்கக் கூடிய வீட்டுக் கடனை கணக்கிடும். உங்கள் கடனைத் திருப்பி செலுத்த வசதியாகவும் எளிதாகவும் இருக்கும் ஒரு காலவரையறையை அறிய இந்தக் கால்குலேட்டர் உங்களுக்கு உதவும்.

தேவைப்படும் கடன் தொகையை உள்ளிடவும்
Thirty Thousand
உங்கள் மொத்த மாத வருவாயை உள்ளிடவும்
Thirty Thousand
நீங்கள் செலுத்தும் மாத தவணையின் கூட்டு தொகையை உள்ளிடவும்
Thirty Thousand
நீங்கள் விரும்பும் கடனை திருப்பி செலுத்தும் காலத்தவணையை உள்ளிடவும்
1 years 4 months
Months
வட்டி விகிதத்தை உள்ளிடவும் (வருடாந்திர)
%

நீங்கள் பெறக்கூடிய கடன் தொகை

0

நீங்கள் செலுத்த வேண்டிய தவணை

0

கீழே உள்ள விவரங்களை நிரப்பவும்


தயவுசெய்து உங்கள் முழுப்பெயரை உள்ளிடவும்
தயவுசெய்து உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடவும்
தயவுசெய்து கடன் தொகையை உள்ளிடவும்
தயவுசெய்து மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும்
உங்கள் நகரத்தைத் தேர்வு செய்க

தயவுசெய்து விதிமுறைகள் & நிபந்தனைகளை ஏற்கவும்

சுயதொழில் முனைவோரின் வீட்டுக்கடனுக்கு தேவையான ஆவணங்கள்

பல முறை வரத் தேவை இல்லாமல், இந்த ஆவணங்களை சமர்ப்பித்து 72 மணி நேரத்துக்குள் உங்கள் கடன் அனுமதியைப் பெறுங்கள்.

சுயதொழில் முனையும் தனிநபர்

 • நீங்கள் கையொப்பம் இட்ட முழுதாக நிரப்பிய விண்ணப்பம்
 • பான் அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் போன்ற அடையாளம் மற்றும் குடியிருப்பு சான்று (KYC) 
 • சமீபத்திய 2 வருமான அறிக்கை, சமீபத்திய இரண்டாண்டு பி&எல் கணக்குகள் மற்றும் பி/எஸ் (அட்டவணைகளுடன்), 6 மாத வங்கி கணக்கு அறிக்கை போன்ற வருமான சான்று
 • சொத்து ஆவணங்கள் (ஒரு சொத்தை நீங்கள் இன்னும் முடிவுசெய்யாவிட்டால்)

சுயதொழில் தனிநபர் அல்லாதவர்

 • நீங்கள் கையொப்பம் இட்ட முழுதாக நிரப்பிய விண்ணப்பம்
 • பான் அட்டை, ஜிஎஸ்டி பதிவு நகல், ஏஓஏ, நிறுவன எம்ஓஏ போன்ற அடையாளச் சான்று (கேஒய்சி)
 • சமீபத்திய 2 வருமான அறிக்கை, சமீபத்திய இரண்டாண்டு பி&எல் கணக்குகள் மற்றும் பி/எஸ் (அட்டவணைகளுடன்), 6 மாத வங்கி கணக்கு அறிக்கை போன்ற வருமான சான்று
 • சொத்து ஆவணங்கள் ( ஒரு சொத்தை நீங்கள் இன்னும் முடிவுசெய்யாவிட்டால்)

மாதச்சம்பளதாரருக்கு வீட்டுக்கடனுக்கான வீதம் & கட்டணங்கள்

எங்கள் வீதங்கள் மற்றும் கட்டணங்களை வெளிப்படையாக வைப்பதற்கு நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம்.

கட்டண வீதங்கள்*
உள்நுழைவுக் கட்டணம் (கேஒய்சி சரிபார்த்தலுக்கு)

₹ 5,000

செயல்முறை /நிர்வாக கட்டணம் (அனுமதியின் போது விதிக்கப்படும்) கடன் தொகையின் 0.75 % அல்லது ₹ 11000 இதில் எது அதிகமோ அது
முன்செலுத்தல் கட்டணங்கள் (தனிநபர் அல்லதவர்களுக்கு மட்டும்)

உங்கள் வீட்டுக் கடனில் பகுதி அல்லது முழுவதையும் உங்களால் திருப்பிக்கட்ட முடியுமானால், உங்கள் வீட்டுக்கடனில் பகுதி அல்லது முழுவதையும் நீங்கள்

தெரிந்து கொண்ட கால அளவு எதுவாக இருந்தாலும் உங்கள் வசதிப்படி திருப்பி செலுத்தலாம். குறைந்தபட்ச திருப்பிச்செலுத்தல் கட்டணமாக 0-2% வீதம் நாங்கள் விதிக்கிறோம்.

*இந்த சதவீதங்களில் பொருந்தும் வரிகள் மற்றும் சட்ட பூர்வ வரிவிதிப்புகள் அடங்கவில்லை, ஏதாவது இருந்தால்
# இந்த கட்டணங்களுக்கு மேலாகவும் அதிகமாகவும் தற்போதைய வீதத்தில் பொருட்கள் மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) மற்றும் பிற அரசு வரிகள் பொருந்தும்.

பொறுப்பு துறப்பு:

 • மேற்குறிப்பிடப்பட்ட வீதங்கள், கட்டணங்கள் ஐசிஐசிஐ வீட்டுக்கடன் வசதி நிறுவனத்தின் முழு விருப்பத்தின்படி அவ்வப்போது செய்யப்படும் மாற்றங்கள்/ திருத்தியமைத்தலுக்கு உட்பட்டவை.
 • இந்த கட்டணங்களுக்கு மேலாகவும் அதிகமாகவும் தற்போது நடைமுறையில் இருக்கும் வீதத்துக்கு ஏற்ப ஜிஎஸ்டி, பிற வரிகள் மற்றும் கட்டணங்கள் பொருந்தும்.
 • ஐசிஐசிஐ வீட்டுக் கடனின் பின்வரும் மிதக்கும் வட்டி வீதம் ஐசிஐசிஐ வீட்டுக் கடன் பிரைம் லெண்டிங் வீதத்துடன் (ஐஎச்பிஎல்ஆர்) இணைக்கப்பட்டுள்ளது.
 • கால்குலேட்டர் வழிகாட்டும் நோக்கத்துக்காகவே பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு வழங்கல் அல்ல மேலும் அதன் முடிவுகள் உண்மை நிலையில் இருந்து மாறுபடலாம்.

 

eNACH Mandate Registration Process - In 5 Easy Steps!

 

மாதச்சம்பளதாரருக்கு வீட்டுக்கடன் பற்றி அடிக்கடி கேட்கும் கேள்வி

நீங்கள் ஒரு வீட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த உடன் ஒரு வீட்டுக்கடனுக்காக விண்ணப்பிக்கலாம். அதாவது நீங்கள் ஒரு நிலச்சொத்தை இறுதிப்படுத்தும் முன்னர் கூட. இருப்பினும் நீங்கள் இந்தச் செயல் முறையைத் தொடங்கும் முன்னர் உங்களிடம் ஏதாவது சொத்து ஆவணம் உங்கள் கையில் இருக்க வேண்டும். வெவ்வேறு வகையான சொத்துக்கு நீங்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் பட்டியல்:

அதிகபட்ச காலவரையறையாக நீங்கள் ஒரு கடனை 25 ஆண்டுகளுக்குப் பெறலாம். இருப்பினும், இந்தக் காலவரையறை 60 (மாதச்சம்பளதாரர்) அல்லது 70 (சுயதொழில் முனைவோர்) வயதுக்கு அல்லது நீங்கள் ஓய்வுபெறும் வயது ஆகியவற்றில் எது முந்தியதோ அதற்கு மேல் இருக்கக்கூடாது. எங்களது 140 + ஐசிஐசிஐ எச்எஃப்சி கிளைகளில் இருக்கும் எங்கள் நுட்ப வல்லுநர்கள் அணி உங்களோடு நேரம் செலவழித்து உங்களுக்கு ஒரு வசதியான திருப்பிச் செலுத்தும் கால வரையறையை தீர்மானிக்க உதவுகிறார்கள். சரியான திருப்பிச் செலுத்தும் காலவரையறையை தீர்மானிக்கும்போது உங்கள் வருமானம், வயது மற்றும் ஏற்கெனவே இருக்கும் மாதத்தவணைகளைக் கருத்தில்கொள்ள வேண்டும்.

உங்கள் வீட்டுக் கடனுக்கு நீங்கள் மாதம் தோறும் வட்டி கட்ட வேண்டும். மாதத் தவணை விருப்புரிமையையும் நீங்கள் தேர்வு செய்யலாம். மாதம் தோறும் ஒரே தொகையையும் (சம மாதத் தவணை) கட்டலாம். அல்லது நீங்கள் எஸ்.யு.ஆர்.எஃப் (SURF)விருப்புரிமை அல்லது ஸ்டெப் அப் ரீபேமெண்ட் ஃபெசிலிட்டியையும் தேர்வு செய்யலாம். அதாவது காலம்செல்லச் செல்ல உங்கள் வருமானம் ஏறஏற உங்கள் மாதத் தவணையும் அதிகரிக்கும். முதல் விருப்புரிமையில் உங்கள் வருமானம் அதிகரிக்கும் போது மாதத்தவணை கட்டும் பளு குறையும் என்பது ஒரு நன்மை. இரண்டாவது விருப்புரிமையில் வருமானம் அதிகரிக்கும் போது மாதத்தவணையும் அதிகரித்து மொத்த கடன்கட்டும் காலவரையறை குறையும் என்பது ஒரு நன்மை ஆகும்.

எங்கள் தகுதி அளவுகோல்கள் நெளிவுசுளிவானவை மற்றும் நிறைவுசெய்ய எளிதானவை. நாங்கள் குறைந்த அளவே ஆவண வேலைகளை வைத்திருப்பதால் செயல்முறை துரிதாமாக இருக்கிறது. நீங்கள் கடன் பெற தகுதியானவரா என்பதை எங்கள் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர் மூலம் உடனடியாக அறிந்துகொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு வீட்டுக்கடன் பெற தகுதி இல்லை என்று தெரிந்தாலும் உங்களுக்கு அருகில் இருக்கும் ஐசிஐசிஐ எச்எஃப்சி கிளையில் உள்ள எங்கள் சட்ட மற்றும் நுட்ப வல்லுநர் அணி உங்கள் தகுதியை மேம்படுத்த பல வழிகளை உங்களுக்குத் தெரிவிக்க முடியும். ஆகவே இன்றே உதவி கோருங்கள்.

உங்கள் துணைவர் அல்லது உங்கள் குடும்பத்தில் அடுத்த உறுப்பினர் இணை விண்ணப்பதாரராக இருக்கலாம். உங்கள் இணை விண்ணப்பதாரர் பணியில் இருக்க வேண்டும் அல்லது சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆகவே பணியில் இல்லாவிட்டாலும் உங்கள் துணைவரை சேர்க்கலாம்.பெண்களை இணை விண்ணப்பதாரராக சேர்ப்பதனால் நீங்கள் குறைந்த வட்டி வீதத்தைப் பெறுவீர்கள். உங்கள் சொத்துக்கு ஒன்றுக்கும் மேல் உரிமையாளர்கள் இருந்தால் இருவரும் அல்லது அனைவரும் இணை விண்ணப்பதாரர்களாக இருக்க வேண்டும். அருகில் இருக்கும் ஐசிஐசிஐ எச்எஃப்சி கிளைக்குச் சென்று ஒரு இணை விண்ணப்பதாரரை இணைப்பது எப்படி, எதற்காக என்பதை எங்கள் வல்லுநர் அணியைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.

 • வீட்டுக் கடன்

கட்டுமானத்தின் கீழ் இருக்கும் சொத்து, உரிமை கொள்ளும் நிலையில் இருக்கும் சொத்து, மறுவிற்பனை, கட்டப்படக்கூடிய, மற்றும் குடியிருப்புக்கு மறுநிதி அளித்தல் ஆகிய சொத்துக்களுக்கு நாங்கள் வீட்டுக் கடன் அளிக்கிறோம். சொத்தை இறுதிப்படுத்தும் முன்னர் கூட நீங்கள் வீட்டுக் கடனைப் பெற முடியும்.இன்னும் நீங்கள் முழுமையான வீட்டைத் தேடிக்கொண்டிருந்தால், எங்களது எளிதாக பயன்படுத்தக்கூடிய சொத்து தேடல் இணைய தளத்தின் மூலம் சரியான வீட்டை நீங்கள் தேர்வுசெய்ய நாங்கள் உதவுவோம்.

 • அப்னா கர்

இது போன்ற ஒரு வீட்டுக்கடன் எதுவும் இல்லை. பல்வேறு வகையான பின்னணியும் வருமானமும் கொண்ட பிரிவினருக்கு அப்னா கர் மலிவான வீட்டுக் கடனை வழங்குகிறது. இது பிஎம்ஏஒய்யின் (பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜ்னா) ஒரு விரிவாக்கம் ஆகும். வெகு எளிதாக நிறைவேற்றக் கூடிய தகுதி அளவீடுகளை அப்னா கர் கொண்டுள்ளது.

 • நிலக் கடன்

உங்கள் வீட்டைக் கட்ட நீங்கள் ஒரு மனையை வாங்க கடன் பெறலாம். மூன்று ஆண்டுக்குள் கட்டுமானம் முடிந்து விடும் என்று நீங்கள் ஓரு உறுதிமொழி கையொப்பமிட்ட அளிக்க வேண்டும்.

 • அலுவலக வளாகக் கடன்

உங்கள் அலுவலகக் கட்டிடத்தை வாங்க, கட்ட அல்லது விரிவாக்க இந்தக் கடனை நீங்கள் பெறலாம். சொத்தை வாங்கும் போது மறுசீரமைப்புக்கான தொகையையும் கடன் தொகையில் சேர்க்க முடியும். ஆனால் இதில் தொழிற்சாலை/கல்விநிறுவன சொத்து அடங்காது. உதாரணம்: தொழிற்சாலைகள், கிட்டங்கிகள், பள்ளிகள்/கல்வி நிறுவனங்கள்/கல்லூரிகள்/மருத்துவமனைகள் போன்றவை.

 • இருப்பு மாற்றம்

ஆண்டுக்கு 11 % வட்டி வீதத்துக்கும் மேலாக 2-3 ஆண்டுகளாக ஒரு வீட்டுக்கடனைத் திருப்பி செலுத்தி வருகிறீர்கள். உங்கள் வீட்டுக் கடன் வட்டி குறைந்த பட்சம் 50 அடிப்படை புள்ளிகள் எங்களை விட அதிகமாக இருந்தால் எங்கள் இருப்பு மாற்றல் வசதியின் மூலம் ஐசிஐசிஐ எச்எஃப்சிக்கு மாறவும். இதனால் உங்கள் மாதத் தவணைப் பளு குறையும். ஒப்பீட்டளவில் குறைந்த வட்டி வீதத்தைப் பெற்று மகிழுங்கள். தொடர்ந்து எங்கள் வல்லுநர்களின் கவனிப்பையும் பெறுங்கள்.

 • கூடுதல் கடன்

குழந்தைகளின் கல்வி அல்லது திருமணம், நுகர் பொருள், மறுசீரமைப்பு போன்ற காரணங்களுக்காக கூடுதல் நிதி உதவி தேவைப்பட்டால் உங்களது தற்போதைய வீட்டுக் கடன் ஈட்டுக்கு எதிராக அதே சொத்தின் மேல் கூடுதல் கடனைப் பெற முடியும்.

 • சொத்துக்கு எதிரான கடன்

உங்களுக்கு ஒரு சொத்து இருந்தால் இந்த விருப்புரிமையின் மூலம் சொத்தை ஈடாக வைத்து நியாயமான வட்டி வீதத்தில் அதிகபட்சம் 15 ஆண்டு காலவரையறைக்கு ஒரு கடனைப் பெறலாம்.

 • சொத்துக்கு எதிராக சிறு கடன்

சிறு எல்ஏபி குறைந்த பட்சம் ₹ 3 லட்சத்தில் இருந்து ₹ 15 லட்சம் வரை கடன் வழங்குகிறது. 120 மாதங்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

 • வாடகைக் குத்தகைக் கடன் (Lease Rental Discounting)

உங்களுக்கு சொந்தமாக ஒரு வணிகக் கட்டிடம் இருந்து அதில் இருந்து வாடகை வருமானால் உங்கள் தனிப்பட்ட அவசரத் தேவைக்காக இந்த வாடகையை ஈடாக வைத்துக் கடன் பெற முடியும்.

ஆம், நாங்கள் எப்போது உங்களுக்கு உதவ ஒரு வழியைக் கண்டுபிடிப்போம். நாங்கள் ஐசிஐசிஐ சொத்து தேடல் என்ற பெயரில் ஒரு எளிய இணைய வீடு தேடல் இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். உங்கள் வீடு தேடும் பயணத்தின் ஒவ்வொரு படியிலும் அது உதவும். உங்கள் தேவை மற்றும் முன்னுரிமையின் அடிப்படையில் ஒரு சேகரிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட பட்டியலில் இருந்து உங்கள் இலட்சிய வீட்டை நீங்கள் கண்டுபிடிக்க இது உதவும். அர்ப்பணிப்பு கொண்ட எங்களது உள்ளூர் சொத்து வல்லுநர்களுடன் தேர்வுசெய்யப்பட்ட சொத்துகளுக்கு செல்லவும் ஏற்பாடு செய்கிறோம். மேலும், சட்ட ஆவணங்கள் மற்றும் சொத்து பேரங்களிலும் உதவி செய்கிறோம்.

இது ஓர் இலவச சேவை. முதல் விற்பனை சொத்துக்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. தற்போது இந்த ஒன்பது நகரங்களில் இந்தச் சேவை கிடைக்கிறது:

 1. மும்பை
 2. தில்லி என்சிஆர்
 3. சென்னை
 4. கொல்கத்தா
 5. பெங்களூரு
 6. புனே
 7. லக்னோ
 8. ஐதராபாத்
 9. கொச்சி

இல்லை. விண்ணப்பதாரர் மற்றும் இனை விண்ணப்பதாரர் பெயரில் ஒரு வருமான வரி சான்றே அளிக்கப்படும். வருமான வரி விதிகளின் படி ஒரு வீட்டுக் கடனுக்கு ஒரு சான்றை மட்டுமே அளிக்க முடியும்.

ஐடி இறுதி சான்றிதழ் ஒவ்வொரு நிதி ஆண்டின் இறுதியிலும் வழங்கப்படும். அதன் உங்களுக்கான நகலை நீங்கள் ஏப்ரல் அல்லது மே மாதம் பெறலாம். ஆனால் ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் ஒரு முன் சான்றை கோரிப் பெறலாம்.

கீழ் வருபவைகளில் ஒன்றை நீங்கள் அடையாளச் சான்றாக வழங்கலாம்.

 • பான் அட்டை
 • கடவுச்சீட்டு
 • இந்திய தேர்தல் ஆனையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அட்டை
 • ஆதார் அட்டை வைத்திருப்பதற்கான சான்று
 • ஓட்டுநர் உரிமம்
 • மாநில அரசின் ஓர் அலுவலர் கையொப்பமிட்ட என் ஆர் இ ஜி ஏ வழங்கும் வேலை அட்டை

உங்களுக்கு ஏற்கெனவே ஒரு வீட்டுக் கடன் இருந்தாலும், நீங்கள் சிறந்த வாடிக்கையாளர் சேவை, சிறந்த வட்டி வீதம் மற்றும் நெகிழ்வான விதிமுறைகள் வேண்டும் என்று விரும்பினால் ஐசிஐசிஐ எச்எஃப்சிக்கு மாறுவதைக் கருதுங்கள்.எங்களிடம் ஒரு இருப்பு மாற்றல் வசதி உள்ளது. இது குறைந்த முயற்சி மற்றும் நேரத்தில் உங்கள் வீட்டுக் கடனை ஐசிஐசிஐ எச்எஃப்சிக்கு மாற்ற அனுமதிக்கும். இந்தியாவில் வாழும் இந்தியர்களான சம்பளதாரர் மற்றும் சுயதொழில் முனைவோருக்கு இந்த வசதி கிடைக்கிறது.

ஆம், மேலும் விவரங்களுக்கு எங்கள் மனைக்கடன் பக்கத்துக்கு செல்லவும்

உங்களுக்கு அருகில் இருக்கும் ஐசிஐசிஐ எச்எஃப்சி கிளைக்கு செல்வதால் கிடைக்கும் முக்கிய நன்மை சிறப்பு சலுகைகள் ஆகும். எங்கள் சொந்த வல்லுநர்கள் ஒவ்வொரு சலுகையின் நன்மைகள் வழியாக உங்களை வழிநடத்துவார்கள். இதனால் உங்களுக்கு ஒரு சிறப்பான பயன் கிடைக்கும். நாளின் பயனை அடைய செல்லுங்கள்.