கண்ணோட்டம் – சொத்துக்கு எதிரான கடன் ( Loan Against property )

உங்கள் வணிக வளர்ச்சியை அதிகரிக்க எண்ணுகிறீர்களா? உங்கள் வணிகத்தைப் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்ல விரைவான மற்றும் சுலபமான  நிதி ஆதாரத்தைப் பெறுங்கள்.

முழுமையாகக் கட்டப்பட்ட கட்டிடம், குடியிருப்பு, வணிக அல்லது குத்தகையில் எடுக்கப்பட்ட சொத்துக்களை அடமானம் வைத்து ஐசிஐசிஐ எச்எஃப்சி சொத்துக்கு எதிரான கடனை (LAP) பெறலாம். இந்தக் கடனின் விதிமுறைகள் நெளிவுசுளிவானவை மற்றும் சொத்து எந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்தது. ஒரு ஐசிஐசிஐ எச்எஃப்சி சொத்துக்கு எதிரான கடன் உங்களுக்கு முதலீட்டு வளர்ச்சி, சேவை நடப்பு முதலீட்டுத் தேவைகள் மற்றும் கடன்களை தொகுப்பதற்கு நிதி உதவி அளிக்கும்.

ஐசிஐசிஐ எச்எஃப்சியிடம் இருந்து பெறும் ஒரு சொத்துக்கு எதிரான கடன் மூலம் உங்கள் வணிகத்தை சந்தைகளைத் தாண்டியும் வரம்புகளைக் கடந்தும் வளர்க்கவும் நிலையுயர்த்தவும் தேவைப்படும் நிதியுதவிகளைப் பெறலாம்.

முக்கிய அம்சங்கள் & பயன்கள் – சொத்துக்கு எதிரான கடன்(LAP)

₹ 5 லட்சத்தில் இருந்து ₹ 10 கோடிகள் வரை

எந்த அளவில் உள்ள வணிகத்துக்கும் சொத்துக்கு எதிரான கடன்(LAP) உதவும் – உங்கள் தேவை சிறியதாக இருந்தாலும் அல்லது பெரியதாக இருந்தாலும், நாங்கள் அனைத்திற்கும் நிதியுதவி அளிக்கிறோம். இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் தொழில்முனைவோர் உத்வேகத்தை நாங்கள் ஆதரிப்பதால் உங்களது போன்ற சிறு வணிகத்திற்கும் உதவிசெய்ய நாங்கள் உறுதி பூண்டிருக்கிறோம்.

அனைவருக்கும் கடன்

அரசு ஊழியர்கள் மற்றும் பெருநிறுவன தொழில்முனைவோர், மற்றும் டாக்டர்கள், வழுக்குரைஞர்கள், சிஏக்கள், வணிகர்கள் மற்றும் சிறு வணிகர்கள் போன்ற சுயதொழில் முனைவோர் ஆகிய இருபாலாரையும் எல்ஏபி ஆதரிக்கிறது.

துரித கடன் வழங்கல்

நன்கு ஸ்தாபிக்கப்பட்ட அமைப்புடைய உங்களைப் போன்றவர்களுக்கு எங்களது 135+ கிளையில் ஏதாவது ஒன்றில் இருந்து 72 மணி நேரத்துக்குள் எல்ஏபியைப் பெறலாம். இருக்கும் இடத்தில் உங்களுக்கு வழிகாட்டவும் உங்கள் விண்ணப்பத்தை மீள்பார்க்கவும் எங்களிடம் சட்ட மற்றும் நுட்ப வல்லுநர்கள் அடங்கிய அணி ஒன்று உள்ளது. ஆகவே அடிக்கடி வரவும் ஆவணங்களைத் தரவும் தேவையில்லை.

ஐசிஐசிஐ எச்எஃப்சிக்கு மாறவும்

உங்கள் இஎம்ஐ பளுவைக் குறைக்க எங்கள் இருப்பு மாற்றல் வசதி மூலம் ஐசிஐசிஐ எச்எஃப்சி க்கு மாறி, உங்கள் கடனுக்கு போட்டி வட்டி வீதங்களையும் வரி நன்மைகளையும் பெற்று மகிழுங்கள்.

ஐசிஐசிஐ எச் எஃப்சியில் இருந்து ஏன் ஒரு கடனைப் பெற வேண்டும்?

72 மணி நேரத்துக்குள் ஒரு கடனைப் பெறலாம்.எங்களது 135+ ஐசிஐசிஐ எச்எஃப்சி கிளைகளிலும் இருக்கும் சட்ட மற்றும் நுட்ப வல்லுநர்கள் அடங்கிய அணி இருக்கும் இடத்தில் உங்கள் விண்ணப்பத்தை, ஆவணங்களை அடிக்கடி கோராமல், மீள்பார்வை செய்யும். உங்கள் கடன் செயல் முறையைத் தொடங்க உங்களுக்கு அருகில் உள்ள ஐசிஐசிஐ வங்கிக் கிளைக்கும் நீங்கள் செல்லலாம். 

எங்கள் கிளை அளவிலான வல்லுநர்களை சந்திக்க எங்கள் கிளைகள் ஏதாவது ஒன்றுக்குள் செல்லுங்கள். உங்கள் பயணத்தின் ஒவ்வொரு படியிலும் அவர்கள் உங்களுக்கு உதவ உறுதி பூண்டிருக்கிறார்கள். அவர்கள் உங்கள் மொழியில் பேசுவார்கள் மேலும் உங்கள் பகுதியை நன்கு அறிந்தவர்கள். உங்களுக்கு அருகில் இருக்கும் கிளையைக் கண்டறிய இங்கே கிளிக் செய்யவும். நேருக்கு நேராக சரியான வழிகாட்டுதலைப் பெறவும்.

உங்களுக்கு அருகில் இருக்கும் ஐசிஐசிஐ எச்எஃப்சி கிளைக்கு செல்வதால் கிடைக்கும் முக்கிய நன்மை சிறப்பு சலுகைகள் ஆகும். எங்கள் சொந்த வல்லுநர்கள் ஒவ்வொரு சலுகையின் நன்மைகள் வழியாக உங்களை வழிநடத்துவார்கள். இதனால் உங்களுக்கு ஒரு சிறப்பான பயன் கிடைக்கும்.

நீங்கள் எங்களிடம் இருந்து ஒரு கடனைப் பெறும்போது நீங்கள் ஐசிஐசிஐ எச்எஃப்சி குடும்பத்தின் ஒரு பகுதி ஆகிறீர்கள். அது வெறும் ஒரு கடன் அல்ல, மாறாக ஓர் உறவாகும். ஏற்கெனவே உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு எங்கள் கணினியில் இருப்பதால் ஐசிஐசிஐ எச்எஃப்சியின் தற்போதைய வாடிக்கையாளரான உங்கள் விண்ணப்பம் மிக வேகமாக மீள்பார்வை செய்யப்படும். 

எங்கே விண்ணப்பிப்பது

எங்கள் 135+ ஐசிஐசிஐ எச்எஃப்சிகிளைகளில் ஏதாவது ஒன்றுக்குள் உதவிக்காக செல்லுங்கள். எங்கள் துரித மற்றும் எளிய கடன் விண்ணப்ப செயல்முறை மூலம் எங்கள் கிளை அளவிலான  வல்லுநர்கள் உங்களுக்கு உதவுவார்கள். உங்களுக்கு 72 மணி நேரத்துக்குள் கடன் வழங்கப்படும். உங்களுக்கு அருகில் உள்ள கிளையைக் கண்டறிய இங்கே கிளிக் செய்யவும். உங்களுக்கு அருகில் உள்ள ஐசிஐசிஐ கிளைக்கு சென்று உங்கள் கடன் விண்ணப்பத்தை செயல்முறைப்படுத்துங்கள்.

எப்படி விண்ணப்பிப்பது

  1. தேவைப்படும் ஆவணங்களுடன் 10 நிமிடங்களில் உங்கள் கடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். 
  2. திருப்பிப் பெற முடியாத ‘விண்ணப்ப’ அல்லது ‘உள்நுழைவு’ கட்டணமாக  ₹ 7000 அல்லது ₹ 10,000 (சொத்தைப் பொறுத்து) + GST @ 18% செலுத்துங்கள்
  3. உங்கள் தற்போதைய மாதத் தவணைகள், வயது, வருமானம், மற்றும் சொத்து விவரத்தை ஆராய்ந்து எங்கள் வல்லுநர் அணி உங்கள் விண்ணப்பத்தை விரைவாக மீள்பார்வை செய்யும்.
  4. ஒவ்வொரு ஐசிஐசிஐ எச்எஃப்சிகிளைகளிலும் இருக்கும் எங்கள் வல்லுநர்களால் கடன் தொகை அனுமதியைப் பெறுங்கள்.
  5. கடன் தொகையின் 1% அல்லது 1.5 % (சொத்தைப் பொறுத்து)க்கு இணையான செயல்முறை/ நிர்வாக கட்டணம் + ஜிஎஸ்டி@18% ஐ கடன் அனுமதிக்கப்படும் போது கட்டவும்.

தகுதி – சொத்துக்கு எதிரான கடன்(LAP )

மாதச்சம்பளம் வாங்கும் தனிநபர்

  • நாடு

இந்தியாவில் வாழும் இந்தியர்

  • வயது வரம்பு (முதன்மை விண்ணப்பதாரர்)

28 – 60 ஆண்டுகள்

  • குறைந்த வருமானம்

₹ 7,000 மாதம்

  • சொத்துக்கு எதிரான கடன்(LAP ) வட்டி வீதம்

உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்ரீதியான இலக்குகளை நீங்கள் அடையும் வரை உங்களோடு தொடர்பில் இருப்பதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். அதனால்தான் நாங்கள் பன் வட்டி விருப்பத்தேர்வை வழங்குகிறோம். எங்களது தற்போதைய சொத்துக் கடன் வட்டி வீதம்: மிதக்கும் வீதம் – 12.15 % இல் இருந்து & நிலை வீதம் – 13.10 % இல் இருந்து.

  • இணை உரிமைச் சொத்து

உங்கள் சொத்துக்கு ஒன்றுக்கும் மேல் உரிமையாளர்கள் இருந்தால் இருவரும் அல்லது அனைவரும் இணை விண்ணப்பதாரர்களாக இருக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் சொத்து பாதுகாக்கப்படுவதோடு இரு உரிமையாளர்களும் பயன் அடையலாம்.

சுயதொழில் முனைவோர்

  • நாடு

இந்தியாவில் வாழும் இந்தியர்

  • வயது வரம்பு (முதன்மை விண்ணப்பதாரர்)

28 – 70 ஆண்டுகள்

  • சொத்துக்கு எதிரான கடன்(LAP ) வட்டி வீதம்

வணிகச் சொத்து கடன்களில் நாங்கள் குறைந்த வட்டியை பேண உறுதிபூண்டுள்ளோம். எங்களது தற்போதைய வட்டி வீதம்: மிதக்கும் வீதம் – 12.20 % இல் இருந்து & நிலை வீதம் – 13.20 % இல் இருந்து.

  • இணை உரிமைச் சொத்து

உங்கள் சொத்துக்கு ஒன்றுக்கும் மேல் உரிமையாளர்கள் இருந்தால் இருவரும் அல்லது அனைவரும் இணை விண்ணப்பதாரர்களாக இருக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் சொத்து பாதுகாக்கப்படுவதோடு இரு உரிமையாளர்களும் பயன் அடையலாம்.

இணை விண்ணப்பதாரர்

  • வயது வரம்பு

மாதச்சம்பளதாரர் மற்றும் சுயதொழில் முனைவோர் – 18-65 ஆண்டுகள்

  • நீங்கள் எதற்காக ஒரு இணை விண்ணப்பதாரரை சேர்க்க வேண்டும்

  • நீங்கள் உங்கள் தகுதியை அதிகரிக்க வேண்டும் என்றால் சம்பாதிக்கும் ஒரு இணை விண்ணப்பதாரரை சேர்க்க வேண்டும். இதன் மூலம் கூடுதல் கடன் பெறவும் நீங்கள் தகுதி பெறுகிறீர்கள். இணை விண்ணப்பதாரர் உங்கள் துணைவர் அல்லது குடும்ப உறுப்பினராக இருக்கலாம்.

  • பெண் இணை விண்ணப்பதாரர் வீட்டுக்கடனுக்கு குறைந்த வட்டி வீதம் பெறலாம்

ஒரு சொத்துக்கு எதிரான கடன்(LAP )க்குத் தேவைப்படும் ஆவணங்கள்

ஐசிஐசிஐ எச்எஃப்சியின் 135+ கிளைகளில் ஏதாவது ஒன்றுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களைக் கொண்டுசென்று 72 மணி நேரத்துக்குள் அடிக்கடி வரத் தேவை இல்லாமல் உங்கள் விண்ணப்பத்தை நிறைவு செய்யுங்கள்.

சம்பளம் பெறும் தனிநபர்கள்

  • முழுவதும் பூர்த்திசெய்யப்பட்ட நீங்கள் கையொப்பம் இட்ட விண்ணப்பம்
  • ஆதார், பான் அட்டை. வாக்காளர் அட்டை, என்ஆர்இஜிஏ வழங்கியுள்ள வேலை அடையாள அட்டை போன்ற அடையாளம் மற்றும் குடியிருப்பு சான்று
  • கடைசி 2 மாத சம்பள குறிப்பு, சமீபத்திய படிவம் 16, மற்றும் மூன்று மாத வங்கி கணக்கறிக்கை ஆகிய வருமான சான்று
  • சொத்து ஆவணங்கள்

சுயதொழில் தனிநபர்

  • முழுவதும் பூர்த்திசெய்யப்பட்ட நீங்கள் கையொப்பம் இட்ட விண்ணப்பம்
  • ஆதார், பான் அட்டை. வாக்காளர் அட்டை, போன்ற அடையாளம் மற்றும் குடியிருப்பு சான்று (கேஒய்சி) 
  • கடைசி 2 மாத வருமான அறிக்கை, சமீபத்திய இரண்டு ஆண்டு பி&எல் கணக்குகள் மற்றும் பி/எஸ் (அட்டவணைகளுடன்), மற்றும் மூன்று மாத வங்கி கணக்கறிக்கை ஆகிய வருமான சான்று
  • சொத்து ஆவணங்கள்

தனிநபரல்லாத சுயதொழில் முனைவோர்

  • முழுவதும் பூர்த்திசெய்யப்பட்ட நீங்கள் கையொப்பம் இட்ட விண்ணப்பம்
  • பான் அட்டை. ஜிஎஸ்டி பதிவு, நிறுவனத்தின் ஏஓஏ, எம்ஓஏ போன்ற அடையாளச் சான்று (கேஒய்சி)
  • கடைசி 2 மாத வருமான அறிக்கை, சமீபத்திய இரண்டு ஆண்டு பி&எல் கணக்குகள் மற்றும் பி/எஸ் (அட்டவணைகளுடன்), மற்றும் ஆறு மாத வங்கி கணக்கறிக்கை 
  • சொத்து ஆவணங்கள்

சொத்துக்கு எதிரான கடன்(LAP )க்கான வீதங்கள் & கட்டணங்கள்

நாங்கள் எங்கள் வீதங்கள் மற்றும் கட்டணங்களில் வெளிப்படையாக இருப்பதை முக்கியமாகக் கருதுகிறோம்.

கட்டண வீதங்கள்*
உள்நுழைவு/விண்ணப்பக் கட்டணம் (கேஒய்சி சோதனைக்காக) ₹ 7,000 அல்லது ₹ 10,000 (சொத்தைப் பொறுத்து) + GST @18%
செயல்முறை/ நிர்வாகக் கட்டணங்கள் (அனுமதி நேரத்தில் வசூலிக்கப்படும்) கடந்தொகையின் 1% அல்லது 1.5% (சொத்தைப் பொறுத்து) + ஜிஎஸ்டி @ 18%
முன்செலுத்துதல் கட்டணங்கள்

தேர்வு செய்யப்பட்ட காலவரையறை எதுவாக இருந்தாலும் தனிநபர்கள் (சம்பளதாரர் அல்லது சுயதொழில்), தங்கள் வசதிப்படி முழு எல்ஏபியையும் செலுத்த முடியுமானால் அதைத் தேர்வு செய்யலாம்.

தனிநபர் அல்லாதவர்களுக்கு பகுதி அல்லது முழுமையாக முன்செலுத்துதலுக்கு நாங்கள் குறைந்தபட்சமாக 4% கட்டணம் விதிக்கிறோம்.

மாற்றுதல் கட்டணம் எச்எல் அல்லாத பிஓஎஸ் தொகையின் மேல் 1.00%, மற்றும் பொருந்தும் வரிகள்

*இந்த சதவீதங்களில் பொருந்தும் வரிகள் மற்றும் சட்ட பூர்வ வரிவிதிப்புகள் அடங்கவில்லை, ஏதாவது இருந்தால்

# இந்த கட்டணங்களுக்கு மேலாகவும் அதிகமாகவும் தற்போதைய வீதத்தில் பொருட்கள் மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) மற்றும் பிற அரசு வரிகள் பொருந்தும்.

பொறுப்பு துறப்பு::

மேல் குறிப்பிட்ட வீதங்கள், கட்டணங்கள் அவ்வப்போது ஐசிஐசிஐ வீட்டுக் கடன் நிறுவனத்தின் விருப்புரிமைக்கு ஏற்ப மாற்றங்கள்/ மறுதிருத்தங்களுக்கு உட்பட்டவை ஆகும்.

ஐசிஐசிஐ வீட்டுக்கடன் வசதியின் மிதத்தல் வட்டி ஐசிஐசிஐ வீட்டுக்கடன் வசதி நிறுவன பிரைம் கடன் வீதத்துடன் (IHPLR) இணைக்கப்பட்டுள்ளது.

சொத்துக்கு எதிரான கடன் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நீங்கள் வணிகத்துக்கும் தனிப்பட்ட தேவைக்கும் எல்ஏபியை பெற முடியும். உங்களுக்கு மனவழுத்தம் அளிக்கும் எதையும் மாற்ற அது உதவும். வணிக விரிவாக்கம்

  • நடப்பு முதலீடு
  • கடன் தொகுப்பு
  • உங்கள் குழந்தையின் கல்வி
  • உங்கள் குழந்தையின் திருமணச் செலவு
  • ஒரு அவசர மருத்துவச் செலவு

அல்லது ஐஎச்எஃப்சியால் குறிப்பிடப்படுவது போல்

எல்ஏபிக்கான எங்கள் தகுதி அளவுகோல் நெளிவுசுளிவானது. மேலும் நாங்கள் எளிய தகுதி அளவீடுகளை வைத்துள்ளோம். குறைந்த ஆவணப்படுத்தல் மற்றும் துரித செயல்முறை நேரத்தை உறுதிசெய்கிறோம். எங்களது 140+ ஐசிஐசிஐ எச்எஃப்சி கிளைகள் ஒவொன்றிலும், நீங்கள் எங்கள் சட்ட மற்றும் நுட்ப வல்லுநர்களை சந்திப்பீர்கள். அவர்கள் படிப்படியாக ஒரு நேரத்தில் ஒன்றாக முழு செயல் முறைக்குள்ளும் வழிகாட்டி அவர்களால் முடிந்த எல்லா வகையிலும் உதவி செய்வார்கள்.

சம்பாதிக்க வில்லை என்றாலும் கூட உங்கள் இணையர் அல்லது அடுத்த குடும்ப உறுப்பினர்  இணை விண்ணப்பதாரராக இருப்பார். இருப்பினும், உங்கள் தகுதியை மேம்படுத்த, உங்கள் இணை விண்ணப்பதாரர் சம்பாதிப்பவராக இருக்க வேண்டும்.  உங்கள் சொத்துக்கு இரண்டு அல்லது அதிகப் பேர் உரிமை உடையவராக இருந்தால், உங்கள் கடனுக்கு இணை உரிமையாளரும் இணை விண்ணப்பதாரராக இருக்க வேண்டும்.