கண்ணோட்டம் – சிறு சொத்துக்கள் மீதான கடன்

நீங்கள் ஒரு சிறு வணிகத்தை நடத்திக் கொண்டு வரலாம். ஆனால் உங்கள் கனவுகளோ வாழ்க்கையை விட இன்னும் பெரிதாக இருக்கலாம்.

ஐசிஐசிஐ எச்எஃப்சியின் சொத்துக்கு எதிரான கடன் (எல்ஏபி) மூலம் உங்கள் தனிப்பட்ட அல்லது வணிகம் தொடர்பான அனைத்து  வகையான அவசரத் தேவைக்காகவும் துரித மற்றும் சுலபமான நிதிஉதவியை ₹ 3 லட்சத்தில் இருந்து தொடங்கும் சிறு கடன்களாகப் பெறலாம். ஒரு கடனைப் பெறுவதில் உங்களுக்கு இருக்கும் வலியை நாங்கள் அறிவோம். வருமான வரி அறிக்கைகள் போன்ற சான்றுகள் இல்லாமலேயே நாங்கள் உங்களுக்கு சொத்துக்கு எதிரான கடனை வழங்குகிறோம்.

தனிப்பட்டதாக இருந்தாலும் தொழில்ரீதியானதாக இருந்தாலும் உங்கள் இலக்குகளை அடைய உங்களுக்கு உதவி அளிப்பதில் நாங்கள் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கிறோம். ஆக உங்கள் வளரும் வணிகத்தின் வெற்றியோடு சமரசம் செய்யாமலேயே உங்கள் குடும்பத்துக்கு வசதியான வாழ்க்கையை அளிக்கலாம்.

முக்கிய அம்சங்களும் நன்மைகளும் - சிறு சொத்துக்கள் மீதான கடன்

வசதியான திருப்பிக்கட்டும் நிபந்தனைகள்

உங்கள் தேவை சிறிதோ பெரிதோ நாங்கள் அவற்றிற்காக நிதியுதவி அளிக்கிறோம். சொத்துக்கள் மீதான கடன் (எல்ஏபி )குறைந்தது ₹3 லட்சத்தில் இருந்து அதிகபட்சமாக ₹15 லட்சம் வரை கடன்களை வழங்குகிறது. எங்கள் நுட்ப வல்லுநர்கள் உங்களோடு நேரம் செலவழித்து உங்களுக்கு ஒரு வசதியான திருப்பி செலுத்தும் கால வரையறையை தீர்மானிக்க உதவுகிறார்கள். அது 120 மாதங்கள் வரை இருக்கலாம்.

எளிய தகுதி

ஒரு சொத்துக்கு எதிரான கடனை ஐசிஐசிஐ எச்எஃப்சியில் இருந்து பெறுவது எளிது. ஏனெனில் நாங்கள் எளிய தகுதி விதிமுறைகளையே வைத்துள்ளோம். அடிப்படை ஆவணங்களே போதுமானவையாகும். ஐடிஆர் போன்ற முறையான வருமான சான்றுகள் இல்லை என்றால் கூட எங்கள் வல்லுநர்கள் உங்களோடு நேரம் செலவழித்து உங்கள் வணிகத்தின் இயல்பை புரிந்துகொள்வார்கள்.  உங்கள் தகுதியை அதிகரிக்க சம்பாதிக்கும் உங்கள் இணையர் அல்லது அடுத்த குடும்ப உறுப்பினரை இணை விண்ணப்பதாரராக சேர்த்துக்கொள்ளுங்கள்.

வெவ்வேறு பணிசெய்வோருக்குக் கடன்கள்

அரசு ஊழியர் மற்றும் பெரும் நிறுவன தொழில் வல்லுநர்கள் போன்ற சம்பளதாரர்களுக்கும் மட்டுமல்லாமல் டாக்டர்கள், வழக்குரைஞர்கள், சிஏக்கல், வணிகர்கள் மற்றும் சிறு வணிகர்கள் போன்ற சுயவேலை செய்பவர்களுக்கும் எல்ஏபி உதவி செய்கிறது.உங்களைப் போன்ற எஸ்எம்இக்கள் மற்றும் எம்எஸ்எம்இக்கள்தான் இந்தியாவின் வளரும் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பு என்று நாங்கள் நம்புகிறோம். ஆகவே சிறு வணிகத்துக்கு உதவி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

துரித கடன் வழங்கல்

உங்கள் கடனை வழங்க 72 மணி நேரத்துக்குக் குறைவாகவே ஆகிறது. இதற்குக் காரணம் ஐசிஐசிஐ எச்எஃப்சியின்  135+ கிளைகளில் இருக்கும் சட்ட மற்றும் நுட்ப வல்லுநர்கள் இருக்கும் இடத்திலேயே உங்கள் விண்ணப்பத்தை மீள்பார்வை செய்து உங்கள் கேள்விகளுக்கு முகத்துக்கு முகம் பதிலளிப்பார்கள். இதனால் ஆவணங்களுக்காக பலமுறை வருகை புரிவதையும் ஆவணங்கள் கோருவதையும் தவிர்க்கலாம்.

வட்டி வீதங்கள்

உங்களுக்கு ஏற்கெனவே ஒரு சொத்துக்கு எதிரான கடன் இருந்தாலும், நீங்கள் அதை ஐசிஐசிஐ எச் எஃஇசிக்கு மாற்றி மாதத் தவணை பளுவைக் குறைத்து குறைந்த வட்டி வீத விருப்புரிமையையும் பெறலாம். நீங்கள் உங்கள் எல்ஏபியை ஐசிஐசிஐ எச்எஃஇசிக்கு எங்கள் இருப்பு மாற்றல் வசதியின் மூலம் மாற்றி ஐசிஐசிஐ எச் எஃஇசி குடும்பத்தில் இணையலாம்.

தனிப்பட்ட அல்லது வணிகத் தேவைகளை சமநிலைசெய்க

எந்தக் கனவும் சிறியதோ அல்லது பெரியதோ அல்ல. நாங்கள் அதை மதிக்கிறோம். சொத்துக்கு எதிராக நீங்கள் ₹ 3 லட்சத்தில் இருந்து ₹ 15 லட்சம் வரை கடன் பெறலாம். அது உங்கள் மளிகைக் கடையின் வணிக விரிவாக்கமாக இருக்கலாம். ஒரு உணவு வணிகத்துக்கான நீண்ட கால நடப்பு முதலீட்டாக இருக்கலாம்.  அல்லது குழந்தையின் கல்விக்கான நிதியுதவியாக இருக்கலாம். நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

ஐசிஐசிஐ எச் எஃஇசியில் இருந்து ஏன் ஒரு கடனைப் பெற வேண்டும்?

உங்கள் கனவை நனவாக்குவதற்கு என்றே உருவாக்கப்பட்ட ஒரு தயாரிப்புதான் எல்ஏபி. முறையான ஆவணங்கள் இல்லாததால் யாரும் தங்கள் இலக்குகளை அடையாமல் இருக்கக்கூடாது என்று நாங்கள் நம்புகிறோம். எல்ஏபி பிரராம்ப் போன்ற தயாரிப்புகளை எளிதான தகுதி அளவுகோல்களுடன் நாங்கள் உருவாக்குகிறோம். இது கடன் செயல்முறையை எளிமையாகவும், தொடக்கத்திலிருந்து முடிவு வரை உங்களை மன அழுத்தம் இல்லாமலும் வைக்கிறது.

உங்கள் உள்ளூர் வல்லுநர்களைச் சந்திக்க எங்கள் கிளைகளில் ஏதாவது ஒன்றிற்குள் செல்லுங்கள். உங்கள் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் உங்களுக்கு உதவ அவர்கள் உறுதிபூண்டுள்ளனர். அவர்கள் உங்கள் மொழியைப் பேசுகிறார்கள், மேலும் உங்கள் வட்டாரத்தை நன்கு அறிந்தவர்களாக இருக்கிறார்கள். உங்களுக்கு மிக அருகில் இருக்கும் கிளையைக் கண்டுபிடிக்க இங்கே கிளிக் செய்து, முகமுகமாக சரியான வழிகாட்டுதலைப் பெறுங்கள்.

ஒவ்வொரு ஐசிஐசிஐ எச்எஃப்சி கிளையிலும், நீங்கள் 72 மணி நேரத்திற்குள் ஒரு கடனைப் பெறலாம். எங்களிடம் உள்ள சட்ட மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழுவினர் நேரடியாக அதே இடத்தில் ஆவணங்களை அடிக்கடி கேட்காமலும் உங்களை பலமுறை அழைக்காமலும் உங்கள் கடன் விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்வார்கள்.

உங்களுக்கு அருகிலுள்ள ஐசிஐசிஐ எச்எஃப்சி கிளையில் நுழைவதன் மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை சிறப்பு சலுகைகள் ஆகும். எங்கள் நிறுவன வல்லுநர்கள் ஒவ்வொரு சலுகைகளின் நன்மைகளையும் விளக்கி உங்களுக்கு வழிகாட்டுவார்கள். ஆகவே உங்களுக்கு உண்மையிலேயே உதவும் ஒன்றை நீங்கள் கண்டறியலாம். நாளின் டீலைக் கண்டறிய உள்நுழையுங்கள்.

எங்களிடம் இருந்து நீங்கள் ஒரு கடனைப் பெறும்போது, நீங்கள் ஐசிஐசிஐ எச்எஃப்சி குடும்பத்தின் ஒரு அங்கமாகிவிடுகிறீர்கள். இது ஒரு கடன் மட்டுமல்ல, ஓர் உறவும் கூட. ஐசிஐசிஐ எச்எஃப்சியின் தற்போதைய வாடிக்கையாளராக இருந்தால், உங்கள் விண்ணப்பம் விரைவாக மதிப்பாய்வு செய்யப்படலாம், ஏனெனில் பல காசோலைகள் ஏற்கெனவே பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன, மேலும் உங்கள் ஆவணங்கள் ஏற்கெனவே எங்கள் கணினியில் உள்ளன. இன்று, உங்கள் நிதியை சரியான பாதையில் திருப்ப உங்களுக்கு ஒரு கடன் தேவைப்படலாம். ஆனால் நாளை, நீங்கள் உங்கள் வணிகத்தை விரிவுபடுத்துவீர்களானால், அல்லது உங்கள் சேமிப்பை வளர்க்க எஃப்டியைத் தேடுவீர்களானால், நாங்கள் உங்களுக்கு உதவ முடியும்.

எங்கு விண்ணப்பிப்பது

உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளுக்கும் எங்கள் 135+ ஐசிஐசிஐ எச்எஃஇசி கிளை ஒன்றுக்கு செல்லுங்கள். எங்கள் அயலக வல்லுநர்கள் துரித மற்றும் சுலப கடன் விண்ணப்ப செயல்முறையின் வழியாக உங்களுக்கு உதவி செய்வார்கள். உங்கள் கடனை நீங்கள் வெறும் 72 மணி நேரத்தில் பெற முடியும். ஏனெனில் நாங்கள் உங்களிடம் மிகவும் அடைப்படையிலான ஆவணங்களையே கேட்போம். மேலும் சுலப தகுதி விதிமுறைகளையே அளிக்கிறோம்.  உங்களுக்கு அருகில் உள்ள கிளையை அறிய இங்கே கிளிக் செய்யவும். உங்களுக்கு அருகில் ஐசிஐசிஐ எச் எஃஇசி கிளை இல்லை என்றால் அருகில் உள்ள ஐசிஐசிஐ கிளைக்கு சென்று உங்கள் கடன் செயல்முறையைத் தொடங்கவும்.

நீங்கள் 1800 267 4455 என்ற எண்ணில் எங்களை அழைக்கலாம்.

எவ்வாறு விண்ணப்பிப்பது

 1. தேவைப்படும் ஆவணங்களோடு உங்கள் கடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க 10 நிமிடங்கள் ஒதுக்கவும்.
 2. திருப்பிப் பெற முடியாத ‘விண்ணப்ப’ அல்லது ‘உள்நுழைவு’ கட்டணமாக  ₹ 7000 அல்லது ₹ 10,000 (சொத்தைப் பொறுத்து) + GST @ 18% செலுத்துங்கள்
 3. உங்கள் தற்போதைய மாதத் தவணைகள், வயது, வருமானம், மற்றும் சொத்து விவரத்தை ஆராய்ந்து எங்கள் வல்லுநர் அணி உங்கள் விண்ணப்பத்தை விரைவாக மீள்பார்வை செய்யும்.
 4. ஒவ்வொரு ஐசிஐசிஐ எச்எஃப்சிகிளைகளிலும் இருக்கும் எங்கள் வல்லுநர்களால் கடன் தொகை அனுமதியைப் பெறுங்கள்.
 5. கடன் தொகையின் 1% அல்லது 1.5 % (சொத்தைப் பொறுத்து)க்கு இணையான செயல்முறை/ நிர்வாக கட்டணம் + ஜிஎஸ்டி@18% ஐ கடன் அனுமதிக்கப்படும் போது கட்டவும்.

தகுதி – சிறு சொத்துக்கள் மீதான கடன் (எல்ஏபி)P

மாதச்சம்பளம் பெறும் தனிநபர்

 • நாடு

இந்தியாவில் வாழும் இந்தியர்

 • வயது வரம்பு (முதன்மை விண்ணப்பதாரர்)

28 – 60 ஆண்டுகள்

 • குறைந்த வருமானம்

₹ 7,000 மாதம்

 • அதிகபட்ச கடன் தொகை

₹ 15 லட்சம்

 • பிராரம்ப் சொத்துக்கள் மீதான கடன் (எல்ஏபி )வட்டி வீதம்

உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்ரீதியான இலக்குகளை நீங்கள் அடையும் வரை உங்களோடு தொடர்பில் இருப்பதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். அதனால்தான் நாங்கள் பன் வட்டி விருப்பத்தேர்வை வழங்குகிறோம். எங்களது தற்போதைய சொத்துக் கடன் வட்டி வீதம்: மிதக்கும் வீதம் – 12.15 % இல் இருந்து & நிலை வீதம் – 13.10 % இல் இருந்து.

 • இணை உரிமைச் சொத்து

பெண்கள் இணை விண்ணப்பதாரர்களாக விண்ணப்பிப்பதை ஊக்குவிப்பதற்காக ஐசிஐசிஐ எச்எஃப்சி அவர்களுக்கு சிறந்த வட்டி வீதங்களை வழங்குகிறது. அவர்கள் சம்பாதிக்காவிட்டாலும் உங்கள் வீட்டுக் கடனில் உங்கள் மனைவி அல்லது தாயைச் சேர்த்தால், குறைந்த வட்டி வீதத்தை உங்களால் பெற முடியும்.

சுயதொழில் முனைவோர்

 • நாடு

இந்தியாவில் வாழும் இந்தியர்

 • வயது வரம்பு (முதன்மை விண்ணப்பதாரர்)

28 – 70 ஆண்டுகள்

 • வருமான வரம்பு

₹ ஆண்டுக்கு 1 லட்சம் முதல் ₹ 15 லட்சம் வரை

 • சொத்துக்கள் மீதான கடன் எல்ஏபி வட்டி வீதம்

குறைந்த வட்டி வணிக சொத்துக் கடனை உறுதிப்படுத்துவதில் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்; எங்கள் தற்போதைய வட்டி வீதங்கள்: மிதக்கும் வீதம் – 12.20 இல் இருந்து & நிலை வீதம் – 13.20 இல் இருந்து

 • இணை உரிமைச் சொத்து

பெண்கள் இணை விண்ணப்பதாரர்களாக விண்ணப்பிப்பதை ஊக்குவிப்பதற்காக ஐசிஐசிஐ எச்எஃப்சி அவர்களுக்கு சிறந்த வட்டி வீதங்களை வழங்குகிறது. அவர்கள் சம்பாதிக்காவிட்டாலும் உங்கள் வீட்டுக் கடனில் உங்கள் மனைவி அல்லது தாயைச் சேர்த்தால், குறைந்த வட்டி வீதத்தை உங்களால் பெற முடியும்.

இணை விண்ணப்பதாரர்

 • வயது வரம்பு

மாதச்சம்பளதாரர் மற்றும் சுயதொழில் முனைவோர் – 18 – 65 ஆண்டுகள்

 • நீங்கள் ஏன் ஒரு இணை விண்ணப்பதாரரை சேர்க்க வேண்டும்

 • நீங்கள் உங்கள் தகுதியை அதிகரிக்க வேண்டும் என்றால் சம்பாதிக்கும் ஒரு இணை விண்ணப்பதாரரை சேர்க்க வேண்டும். இதன் மூலம் கூடுதல் கடன் பெறவும் நீங்கள் தகுதி பெறுகிறீர்கள். இணை விண்ணப்பதாரர் உங்கள் துணைவர் அல்லது குடும்ப உறுப்பினராக இருக்கலாம்.

 • பெண்களை இணை விண்ணப்பதாரராக சேர்ப்பதை ஊக்குவிக்க பெண்களுக்கு சிறந்த வட்டி விகிதத்தை ஐசிஐசிஐ எச்எஃப்சி அளிக்கிறது.

சிறு சொத்துக்கள் மீதான கடன் எல்ஏபிக்கு தேவைப்படும் ஆவணங்கள்

பல முறை வரத் தேவையில்லாமல் உங்கள் விண்ணப்பத்தை 72 மணி நேரத்திற்குள் பூர்த்தி செய்ய கீழே குறிப்பிட்டுள்ள முக்கியமான ஆவணங்களை எங்கள் 135+ ஐசிஐசிஐ எச்எஃப்சி கிளைகளில் ஏதாவது ஒன்றிற்குள் கொண்டு செல்லுங்கள்.

மாதச்சம்பள தனிநபர்கள்

 • நீங்கள் கையொப்பம் இட்ட முழுதாக நிரப்பிய விண்ணப்பம்
 • ஆதார் , பான் அட்டை, வாக்காளர் அட்டை, என்ஆர்இஜிஏ வழங்கிய வேலை அட்டை போன்ற அடையாளம் மற்றும் குடியிருப்பு சான்று (கேஒய்சி) 
 • சமீபத்திய 2 மாத சம்பள அறிக்கை, சமீபத்திய படிவம் 16, மூன்று மாத வங்கி கணக்கு அறிக்கை போன்ற வருமான சான்று
 • சொத்து ஆவணங்கள் 

சுயதொழில் முனையும் தனிநபர்

 • நீங்கள் கையொப்பம் இட்ட முழுதாக நிரப்பிய விண்ணப்பம்
 • உங்களுக்கும் உங்கள் வணிகத்துக்குமான பான் அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் போன்ற அடையாளம் மற்றும் குடியிருப்பு சான்று (கேஒய்சி) 
 • சமீபத்திய 2 வருமான அறிக்கை, சமீபத்திய இரண்டாண்டு பி&எல் கணக்குகள் மற்றும் பி/எஸ் (அட்டவணைகளுடன்), 6 மாத வங்கி கணக்கு அறிக்கை போன்ற வருமான சான்று
 • அலுவலக முகவரிச் சான்று (பயன்பாடு)
 • சொத்து ஆவணங்கள் 

சிறு சொத்துக்கள் மீதான கடன் எல்ஏபிக்கான வீதங்கள் & கட்டணங்கள்

உங்கள் கடனுக்கு எப்போது எவ்வளவு கட்ட வேண்டும் என்பதை அறியும் உரிமை உங்களுக்கு உண்டு. கட்டணங்கள் மற்றும் விகிதங்களை கீழே உள்ள பட்டியலில் நீங்கள் காணலாம். எங்கள் கடன் எவ்வாறு செயல்படுகிறது என்பதில் நாங்கள் வெளிப்படைத் தன்மையோடு இருக்கிறோம். ஆகவே எங்கள் கிளைகளில் இருக்கும் வல்லுநர்களின் உதவியால் நீங்கள் ஓய்வாக செயல்படலாம்.

கட்டண வீதங்கள்*
உள்நுழைவு/விண்ணப்பக் கட்டணம் (கேஒய்சி சோதனைக்காக) ₹ 7,000 அல்லது ₹ $10,000 (சொத்தைப் பொறுத்து) + GST @18%
செயல்முறை/ நிர்வாகக் கட்டணங்கள் (அனுமதி நேரத்தில் வசூலிக்கப்படும்) கடந்தொகையின் 1% அல்லது 1.5% (சொத்தைப் பொறுத்து) + ஜிஎஸ்டி @ 18%
முன்செலுத்துதல் கட்டணங்கள்

தனிநபர்களுக்கு (சம்பளதாரர் அல்லது சுயதொழில்) உங்கள் பிரரம்ப் எல்ஏபியில் உங்களால் பகுதி தொகை கட்ட முடியுமானால், நீங்கள் உங்கள் கடனில் பாதி அல்லது முழுத்தொகையையும் கட்ட தெரிவு செய்யலாம்.

தேர்வு செய்யப்பட்ட காலவரையறை எதுவாக இருந்தாலும் எல்ஏபி உங்கள் வசதியின்படி. தனிநபர் அல்லாதவர்களுக்கு பகுதி அல்லது முழுமையாக முன்செலுத்துதலுக்கு நாங்கள் குறைந்தபட்சமாக 4% கட்டணம் விதிக்கிறோம்.

மாற்றுதல் கட்டணம் எச்எல் அல்லாத பிஓஎஸ் தொகையின் மேல் 1.00%, மற்றும் பொருந்தும் வரிகள்

* இந்த சதவீதங்களில் பொருந்தும் வரிகள் மற்றும் சட்ட பூர்வ வரிவிதிப்புகள் அடங்கவில்லை, ஏதாவது இருந்தால்

# இந்த கட்டணங்களுக்கு மேலாகவும் அதிகமாகவும் தற்போதைய வீதத்தில் பொருட்கள் மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) மற்றும் பிற அரசு வரிகள் பொருந்தும்.

பொறுப்பு துறப்பு: 

 • மேல் குறிப்பிட்ட வீதங்கள், கட்டணங்கள் அவ்வப்போது ஐசிஐசிஐ வீட்டுக் கடன் நிறுவனத்தின் விருப்புரிமைக்கு ஏற்ப மாற்றங்கள்/ மறுதிருத்தங்களுக்கு உட்பட்டவை ஆகும்.
 • மேலும், ஜிஎஸ்டி, பிற வரிகள் மற்றும் தீர்வைகள் தற்போதைய வீதத்தின் படி பொருந்தும் மற்றும் அவை இவற்றிற்கும் மேலாகவும் அதிகமாகவும் விதிக்கப்படும்.

சிறு சொத்துக்கள் மீதான கடன் எல்ஏபி பற்றி அடிக்கடி கேட்கும் கேள்விகள்

நீங்கள் வணிகத்துக்கும் தனிப்பட்ட தேவைக்கும் பிராரம்ப் எல்ஏபியை பெற முடியும். உங்களுக்கு மனவழுத்தம் அளிக்கும் எதையும் மாற்ற அது உதவும்.

 • வணிக விரிவாக்கம்
 • நடப்பு முதலீடு
 • உங்கள் குழந்தையின் கல்வி
 • உங்கள் குழந்தையின் திருமணச் செலவு
 • ஒரு அவசர மருத்துவச் செலவு

பிரரம்ப் சொத்துக்கள் மீதான கடன் எல்ஏபியின் தகுதி உங்கள் நிதி நிலையைப் பொறுத்தும் நீங்கள் ஈடாக/அடமானமாக அளிக்கும் சொத்தின் மதிப்பைப் பொறுத்தும் அமையும். கடன் தொகை ₹ 3 லட்சத்தில் இருந்து அதிகபட்சமாக ₹15 லட்சம் வரை கிடைக்கும்.

ஒரு கடனுக்கு குடியிருப்பு அல்லது வணிக சொத்தை ஈடாக பயன்படுத்தலாம். இருப்பினும் தற்போது அந்தச் சொத்திற்கு எதிராக எந்தக் கடனும் இருக்கக் கூடாது. தொழிற்சாலை அல்லது கல்விநிறுவன சொத்துக்களை அடமானமாக பயன்படுத்த முடியாது.

பிரரம்ப் எல்ஏபிக்கான எங்கள் தகுதி அளவுகோல் நெளிவுசுளிவானது. மேலும் நாங்கள் எளிய தகுதி அளவீடுகளை வைத்துள்ளோம். குறைந்த ஆவணப்படுத்தல் மற்றும் துரித செயல்முறை நேரத்தை உறுதிசெய்கிறோம். எங்களது 135+ ஐசிஐசிஐ எச்எஃப்சி கிளைகள் ஒவொன்றிலும், நீங்கள் எங்கள் சட்ட மற்றும் நுட்ப வல்லுநர்களை சந்திப்பீர்கள். அவர்கள் படிப்படியாக ஒரு நேரத்தில் ஒன்றாக முழு செயல் முறைக்குள்ளும் வழிகாட்டி அவர்களால் முடிந்த எல்லா வகையிலும் உதவி செய்வார்கள்.

ஐசிஐசிஐ வீட்டுக் கடனின் பின்வரும் மிதக்கும் வட்டி வீதம் ஐசிஐசிஐ வீட்டுக் கடன் பிரைம் லெண்டிங் வீதத்துடன் (ஐஎச்பிஎல்ஆர்) இணைக்கப்பட்டுள்ளது.

இணையம் மூலம் விண்ணப்பிக்கும் விருப்புரிமை எப்போதும் இருந்தாலும், எங்கள் கிளையில் கிடைக்கும் வல்லுநர் கலந்தாலோசனை எப்போதுமே ஒரு சிறந்த யோசனை ஆகும். நீங்கள் நேருக்கு நேர் அமர்ந்து உங்கள் கேள்விகள் அனைத்துக்கும் பதில்பெற முடியும்.

சம்பாதிக்க வில்லை என்றாலும் கூட உங்கள் இணையர் அல்லது அடுத்த குடும்ப உறுப்பினர்  இணை விண்ணப்பதாரராக இருப்பார். இருப்பினும், உங்கள் தகுதியை மேம்படுத்த, உங்கள் இணை விண்ணப்பதாரர் சம்பாதிப்பவராக இருக்க வேண்டும்.  உங்கள் சொத்துக்கு இரண்டு அல்லது அதிகப் பேர் உரிமை உடையவராக இருந்தால், உங்கள் கடனுக்கு இணை உரிமையாளரும் இணை விண்ணப்பதாரராக இருக்க வேண்டும்.