பிஎம்ஏஒய் திட்டம் கண்ணோட்டம்

2015 இல், இந்திய அரசு பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜ்னா (PMAY) என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியது.

2022 க்குள் அனைவருக்கும் மலிவான வீட்டை வழங்குவதை PMAY நோக்கமாகக் கொண்டுள்ளது. மத்திய அரசின் ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தில் ஐசிஐசிஐ (ICICI) வீட்டுக் கடன் திட்டத்தில் இருக்கும் நாங்கள் இணைந்துள்ளோம். பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜ்னா (PMAY) திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள நன்மைகளை நாங்கள் வழங்குகிறோம்.

இந்தியாவில் வீட்டுக்கான தேவையை சந்திக்க பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜ்னாவின் (நகர்ப்புறம்) – அனைவர்க்கும் வீடு என்பதின் கீழ், வீடு வாங்குதல் / கட்டுதல்/ விரிவாக்கம் செய்தல் / மேம்படுத்தலுக்காக EWS/ LIG/ MIG பிரிவினருக்குக் கடனோடு இணைந்த மானிய திட்டத்தை (சிஎல்எஸ்எஸ்)வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் (MoHUPA) 2015 இல் அறிமுகப்படுத்தியது.

பிஎம்ஏஒய் நன்மைகள்

வட்டி பகுதிக்கு வழங்கப்படும் மானியம் வீட்டுக் கடனின் மேல் வெளிச்செல்லும் தொகையைக் குறைப்பதால் PMAYயின் கீழ் இயங்கும் சிஎல்எஸ்எஸ் வீட்டுக்கடனை மலிவாக்குகிறது. இத்திட்டத்தின் கீழ் பெரும்பாலும் உங்கள் வருமான வகையையும் கடன் அளிக்கப்படும் சொத்தின் அளவையும்  பொறுத்து மானியத் தொகை அமைகிறது.

PMAYக்கு எப்போது நீங்கள் விண்ணப்பம் செய்யலாம்?

இத்திட்டம் மூன்று கட்டமாக நடைமுறைப்படுத்தப் படுகிறது. முதல் இரண்டு கட்டங்களும் முடிந்து விட்டது. தற்போது இறுதிக் கட்டம் தொடங்கியுள்ளது. அது 2019 ஏப்ரல் 1 இல் தொடங்கியது. 2022 மார்ச் 31 இல் முடிவடையும்.

ஆகவே, நீங்கள் PMAYயைப் பயன்படுத்த விரும்பினால் அதற்கான நேரம் இப்போதுதான்.

வருமான வாரியாக குழுக்கள் (PMAY நோக்கத்துக்காக)
 • ஈடபுள்யூஎஸ்/எல்ஐஜி திட்டம் - இத்திட்டம் ஜூன் 17, 2015 முதல் செயலில் உள்ளது மற்றும் மார்ச் 31, 2022 வரை அமுலில் இருக்கும்
 • எம்ஐஜி-1 மற்றும் எம்ஐஜி-II திட்டம் - இத்திட்டம் மார்ச் 31. 2020 முதல் செயலில் உள்ளது மற்றும் மார்ச் 31, 2021 வரை அமுலில் இருக்கும் (மேலும் நீட்டிப்புக்கு உட்பட்டு)

பயனாளர் குடும்ப வரையறை: கணவர், மனைவி, திருமணமாகாத மகன்கள் மற்றும்/அல்லது மகள்கள் (எம் ஐஜிவகையில் சம்பாதிக்கும் ஓர் ஆண் உறுப்பினர் திருமண நிலை எவ்வாறாக இருந்தாலும் தனி குடும்பமாகக் கருதப்படுவார்)

பிற நிபந்தனைகள்
 • வருமானம் தவிர, இன்னொரு முக்கிய நிபந்தனை உள்ளது: இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பயனாளர் குடும்பம் அவரது பெயரில் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் ஒரு பக்கா வீட்டை சொந்தமாக கொண்டிருக்கக் கூடாது;
 • இ.டபுள்யூ.எஸ்./எல்.ஐ.ஜி (EWS/LIG) பெறுவதற்கு பெண் உரிமையாளர்கள்/ கூட்டு உரிமையாளர்கள்: புது வீடு வாங்குவதற்கு மட்டுமே உரிமையாளர் பெண்ணாக இருக்க வேண்டும், பழைய வீட்டை புதுபிக்க அல்லது ஏற்கனவே இருக்கும் இடத்தில் வீடு கட்டுவதற்கு உரிமையாளர் பெண்ணாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எம்.ஐ.ஜி (MIG) - I மற்றும் எம்.ஐ.ஜி (MIG) - II: கட்டாயம் இல்லை.
 • நீங்கள் திருமணமானவராக இருந்து PMAY பயனை அடைய விரும்பினால் உங்கள் அல்லது உங்கள் துணைவர் பெயரில் அல்லது இருவரும் இணைந்தும் விண்ணப்பிக்கலாம்;
 • தம்பதியராக உங்கள் வருமானம் ஓர் அலகாகக் கருதப்படும்; இருப்பினும், குடும்பத்தில் வயதுக்குவந்த இன்னொரு ஆண் உறுப்பினர் இருந்தால், திருமண நிலை எவ்வாறு இருந்தாலும் அவர் தனி குடும்பமாகக் கருதப்படுவார். 
 • உங்களுக்கு வேறு ஏதாவது மத்திய அரசின் வீடு வாங்கும்/கட்டும் நிதியுதவி இருக்கக்கூடாது.
 • உங்கள் மொத்தக் குடும்ப வருமானம் பற்றி ஒரு சுய அறிக்கை அளிக்க வேண்டும் மேலும் உங்களுக்குக் கடன் வழங்குபவருக்கு வாங்கும் சொத்தின் பத்திர உரிமையை அளிக்க வேண்டும்.
 • பிஎம் ஏஒய்யின் கீழ் உள்ள அனைத்துக் கடன் கணக்குகளும் உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட வேண்டும்.

பிஎம்ஏஒய் திட்டம் தகுதி

முதலில் சொத்து:

 • மானியத்தைப் பெற, நீங்கள் தேர்வு செய்யும் சொத்து ஒரு தனி அலகாக அல்லது எந்த ஒரு பல மாடிக் கட்டிடத்திலும் ஒரு தனி அலகாக இருக்க வேண்டும்.
 • அடிப்படை வசதிகளான கழிப்பறை, தண்ணீர், சாய்கடை, சாலை, மின்சாரம் போன்றவை அந்த தகுதியுள்ள அலகில் இருக்க வேண்டும்.

இரண்டாவதாக, தளப் பரப்பு (சுவர்கள் அடங்காது) பின்வரும் அளவுக்கு அதிகமாக இருக்கக் கூடாது:

 • EWS: 30 சதுர மீட்டர் (323 ச.அ)
 • LIG: 60 சதுர மீட்டர் (646 ச.அ)
 • MIG (I): 160 சதுர மீட்டர் (1722 ச.அ)
 • MIG (II): 200 சதுர மீட்டர் (2153 ச.அ)

இறுதியாக இருப்பிடம்:

 • 2011 மக்கள்தொகைப் படி அனைத்து சட்டப்படியான நகர்கள் மற்றும் அதற்குப் பின் அறிவிக்கப்பட்ட நகர்கள், சட்டப்படியான நகர்கள் தொடர்பாக அறிவிக்கப்பட்ட திட்ட பகுதிகள் உட்பட.
 • உங்கள் நகர் தகுதி உள்ளதா என்பதை அறிய கீழே தரப்பட்டுள்ள தேசிய வீட்டுவசதி வங்கி இணைப்பைக் கிளிக்செய்து ”சட்டப்படியான நகர் மற்றும் திட்ட பகுதி குறியீடுகள்” என்று அடையாளப்படுத்தப்பட்ட பகுதியைப் பார்க்கவும்: https://nhb.org.in/government-scheme/pradhan-mantri-awas-yojana-credit-linked-subsidy-scheme/

பிஎம்ஏஒய் திட்டம் கடன் வரம்பு

 • EWS: ரூ 6 லட்சம்;
 • LIG: ரூ 6 லட்சம்;
 • MIG (I): ரூ 9 லட்சம்;
 • MIG (II): ரூ 12 லட்சம்
குறிப்பு:

குறிப்பிட்ட வரம்புகளுக்கு மேல் வாங்கும் கூடுதல் கடன்கள் மானியம் அற்ற வீதத்தில் வழங்கப்படும்.

மானிய வட்டியின் நிகர நிகழ் மதிப்பு (NPV) 9%  தள்ளுபடி விகிதத்தில் கணக்கிடப்படும்.

பிஎம்ஏஒய் திட்டம் கடன் கால அளவு

அனைத்து நான்கு வகை கடன்களின் கால வரையறையும் 20 ஆண்டுகள் ஆகும்.

பிஎம்ஏஒய் திட்டம் வட்டி வீதங்கள்

 • EWS: 6.5 %  ரூ 2.67 லட்சம் வரை
 • LIG: 6.5 % ரூ 2.67 லட்சம் வரை
 • MIG (I): 4% ரூ 2.35 லட்சம் வரை
 • MIG (II): 3% ரூ 2.30 லட்சம் வரை

பிஎம்ஏஒய் திட்டத்துக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது

ஆண்டுக்கு 18 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள எந்தக் குடும்பமும் இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். நீங்கள் PMAY மானிய பயனுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் 135+ ஐசிஐசிஐ எச்எஃப்சி (ICICI HFC)கிளைகள் ஏதாவது ஒன்றில் உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். எங்கள் கிளை அளவில் உள்ள வல்லுநர்கள் அதே இடத்தில் உங்கள் விண்ணப்பத்தை மீள்பார்வை செய்து மனுவை  தேசிய வீட்டுவசதி வங்கிக்கு அனுப்புவார்கள். உங்களுக்கு இந்த செயல் முறை எளிதாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

 1. சுய அறிக்கைப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்திசெய்யவும்.
 2. அருகில் உள்ள ஐசிஐசிஐ எச்எஃப்சி (ICICI HFC) கிளையில் சமர்ப்பிக்கவும்
 3. உங்கள் அசல் ஐடி சான்று மட்டும் குடும்பத்தினர் அனைவரின் ஆதார் அட்டையை வைத்திருக்கவும்.

* மானியத்திற்கான உங்கள் கோரிக்கை தேசிய வீட்டுவசதி வங்கியின் ஒப்புதலுக்கும் அனுமதிக்கும்  அதன்பேரில் சிஎல்எஸ்எஸிடம் இருந்து நன்மைகளைப் பெறுவதற்கான உங்கள் தகுதியை மதிப்பீடு செய்வது இந்திய அரசின் முழு விருப்புரிமைக்கும் உட்பட்டது. இங்கு அடங்கியுள்ள  உள்ளடக்கம் உரிமையை மதிப்பிடுவதற்கான திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட அளவு கோல்கள் ஆகும்.

பிஎம்ஏஒய் மானியக் கால்குலேட்டர்

பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜ்னா (பிஎம்ஏஒய்) வுக்கு நீங்கள் தகுதி பெற்றிருக்கிறீர்களா மற்றும் நீங்கள் எவ்வளவு மானியம் பெற முடியும் என்பதை எங்கள் பிஎம்ஏஒய் மானியக் கால்குலேட்டர் மூலம் கண்டறியுங்கள்.

அரசின் எந்த ஒரு வீட்டுவசதி திட்டத்தில் இருந்தாவது அல்லது PMAYயின் கீழ் நன்மையை மத்திய அரசின் உதவியின் கீழ் பெற்றுள்ளீர்களா?
இதுதான் உங்களது முதல் முழுமையான வீடா?
மொத்தக் குடும்ப ஆண்டு வருமானத்தை உள்ளிடுக
Thirty Thousand
கடன் தொகை
Ten Lakhs
கடன் கால அளவை (மாதங்கள்) உள்ளிடுக
8 year's and 1 month
மாதங்கள்

PMAY Subsidy Amount

0


மானிய வகை

EWS/LIG

மாதத் தவணையில் நிகர குறைப்பு

நிகர குறைப்பு மதிப்பு

கீழே உள்ள விவரங்களை நிரப்பவும்

தயவுசெய்து உங்கள் முழுப்பெயரை உள்ளிடவும்
தயவுசெய்து உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடவும்
தயவுசெய்து கடன் தொகையை உள்ளிடவும்
தயவுசெய்து மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும்
உங்கள் நகரத்தைத் தேர்வு செய்க
தயவுசெய்து விதிமுறைகள் & நிபந்தனைகளை ஏற்கவும்

பிஎம்ஏஒய் அடிக்கடி கேட்கும் கேள்விகள்

உங்கள் பெயர் பிஎம்ஏஒய் பட்டியலில் (2021-22) இருக்கிறதா என்று பார்க்க நீங்கள் நகர்ப்புற அல்லது கிராமப்புற பகுதியில் விண்ணப்பித்தீர்களா என்று பார்க்கத் தொடங்குங்கள்.

பிஎம்ஏஒய் நகர்ப்புற பகுதியில் விண்ணப்பித்திருந்தால், பின்வரும் செய்முறைகளை பின்பற்றவும்

 • pmaymis.gov.in-க்கு வருகை தரவும்
 • ‘பயனாளரை தேர்வு’ செய்யவும்
 • டிராப்-டவுண் மெனுவிலிருந்து ‘சேர்ச் பை நேம்’ என்பதை தேர்வு செய்யவும்
 • உங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்யவும்
 • உங்கள் ஆதார் எண் தரவுத் தொகுப்பில் இருந்தால், நீங்கள் உங்கள் பெயரை பட்டியலில் காண்பீர்கள்

நீங்கள் பிஎம்ஏஒய் கிராமப் பகுதியில் விண்ணப்பித்திருந்தால், பின்வரும் செய்முறைகளை பின்பற்றவும்

 • வருகை தரவும் rhreporting.nic.in/netiay/Benificiary.aspx
 • உங்கள் பதிவு எண்ணை ஏற்றி ‘சப்மிட்’ மீதாக க்ளிக் செய்யவும்
 • நீங்கள் ஏற்றிய எண் பயனாளர்கள் தரவுத் தொகுப்பில் கிடைத்தால் உங்கள் விவரங்கள் காட்டப்படும்
 • பதிவு எண் இல்லாமல் தேட ‘அட்வான்ஸ்ட் சேர்ச்’ மீது க்ளிக் செய்யவும்
 • நீங்கள் உங்கள் மாநிலம், மாவட்டம், வட்டம, பஞ்சாயத்து, பெயர், பிபிஎல் எண் மற்றும் வழங்குதல் உத்தரவு போன்ற விவரங்களை ஏற்ற வேண்டிய பக்கத்திற்குச் செல்வீர்கள்
 •  முடிவைப் பார்க்க சேர்ச் மீதாக க்ளிக் செய்யவும்

மாநில அரசுகளால் இயக்கப்படும் பிஎம்ஏஒய் ஆஃப்லைன்-க்கு விண்ணப்பிக்க பொதுவான சேவை மையத்திற்கு (சிஎஸ்சி) வருகை தரவும். ஆஃப்லைன் விண்ணப்பங்களுக்கு, ரூ.25 (மற்றும் ஜிஎஸ்டி) பதிவு கட்டணம் விதிக்கப்படும். உங்கள் விண்ணப்பத்திற்கு ஆதரவளிக்க தயவுசெய்து பின்வரும் ஆவணங்களை வைத்திருக்கவும்:

 • அடையாள ஆதாரம் (ஆதார் கார்டு/ பான் கார்டு/ டிரைவிங் லைசென்ஸ்/ வாக்காளர் அடையாள அட்டை)
 •  முகவரிக்கான ஆதாரம்
 • வருமான ஆதாரம் (படிவம் 16/ புதிய ஐடி ரிடர்ன் அல்லது கடந்த ஆறு மாதங்களுக்கான வங்கி கணக்கு அறிக்கை)
 • இந்தியாவில் உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தினருக்கு எந்தவொரு வீடும் இல்லை என்று தெரிவிக்கும் ஒரு பிரமான பத்திரம்
 • வாங்கக் கூடிய சொத்தின் மதிப்புச் சான்றிதழ்
 • டெவலப்பர் அல்லது பில்டரின் கட்டுமான ஒப்பந்தம்
 • கட்டுமானத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட திட்டம்
 • கட்டுமான/ பழுது நீக்கும் செலவை உறுதிப்படுத்தும் பொறியாளரின் சான்றிதழ்
 • கட்டிடத்தின் உறுதித்தன்மை பற்றிய சான்றிதழ்
 •  சம்பந்தப்பட்ட ஹவுஸிங் சொசைட்டி அல்லது ஆணையத்தின் என்ஓசி
 • (பொருந்தினால்) வாங்குவதற்கு முன்னதாக பணம் செலுத்தியதன் ரசீது
 •  சொத்து ஒதுக்கீட்டுக் கடிதம்/ ஒப்பந்தம் அல்லது வேறு சம்பந்தப்பட்ட சொத்து ஆவணங்கள்

இல்லை. ஏற்கனவே உள்ள வீட்டுக் கடனுக்கு பிஎம்ஏஒய் மானியப் பயன் கிடைக்காது. இந்த திட்டத்திற்கு தகுதி பெற பயன்பெறுபவருக்கு இந்தியாவில் எந்தப் பகுதியிலும் அவர் பெயரில் அல்லது அவர் குடும்பத்தினரின் பெயரில் கட்டப்பட்ட வீடு இருக்கக் கூடாது. இவ்வாறு, பிஎம்ஏஒய் திட்டம் முதல் முறையாக வீடு வாங்குவோருக்கு மட்டுமே பொருந்தும்.

நீங்கள் ஏற்கனவே கடன் பெற்ற வாடிக்கையாளராக இருந்தால், அதாவது உங்களுக்கு ஏற்கனவே உங்கள் பெயரில் வீடு இருந்தால், பிஎம்ஏஒய் திட்டத்தின் கீழாக மானியம் பெறுவதற்கான உங்கள் விண்ணப்பம் மறுக்கப்படும்.

 

நீங்கள் பிஎம்ஏஒய் சிஎல்எஸ்எஸ் மானியம் பெறுவதற்காக விண்ணப்பித்தால், மானியத் தொகையைப் பெற 3-4 மாதங்கள் ஆகலாம்.

மானியம் பெற பிஎம்ஏஒய் திட்டத்திற்கு விண்ணப்பித்ததும், கடன் கொடுக்கும் நிறுவனம் கடன் பெறுவதற்கான உங்கள் தகுதி மற்றும் மானியத் தொகையை சோதிக்கிறது. அதன் பின்னர் கடன் நிறுவனம் கடனை வழங்கி சென்ட்ரல் நோடல் ஏஜென்ஸிகளிலிருந்து (சிஎன்ஏகள்) மானியத்திற்காக உரிமைகோருதலை தொடங்குகிறது. தற்போது மூன்று சிஎன்ஏகள் உள்ளன. அவை ஹவுஸிங் அண்ட் அர்பன் டெவலப்மென்ட் கார்ப. (எச்யூடிசிஓ), நேஷனல் ஹவுஸிங் பேங்க் (என்எச்பி) மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகும். சிஎன்ஏகள் விண்ணப்பத்தை சோதித்து அரசாங்கத்திடமிருந்து தாங்கள் பெறும் நிதியை கொடுக்கின்றன.

வங்கி அல்லது வேறு கடன் நிறுவனத்தில் பிஎம்ஏஒய் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்த பிறகு, உங்களுக்கு விண்ணப்ப ஐடி கொடுக்கப்படும். நீங்கள் இந்த விண்ணப்ப ஐடியை விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க தொடங்கியதிலிருந்து மானியம் கொடுக்கப்படும் வரை விண்ணப்பத்தின் நிலையை கண்டறியலாம். குறுஞ்செய்தி மூலமாக விண்ணப்பம் பற்றிய புதிய செய்திகள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

 

பிஎம்ஏஒய் திட்டத்தின் கீழாக எல்லாரும் பயன் பெற தகுதி பெற்றவர்கள் கிடையாது. பிஎம்ஏஒய் மானிய திட்டத்திற்காக விண்ணப்பிக்கும் முன்பாக, நீங்கள் இந்தத் திட்டத்திற்கு தகுதி பெறுகிறீர்களா என்று நீங்கள் கண்டிப்பாக சோதித்துப் பார்க்க வேண்டும். பிஎம்ஏஒய் மானியத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெறாதவர்கள் யார் என்று பின்வரும் பட்டியல் தெளிவாக குறிப்பிடுகிறது:

 • ஏற்கனவே நாட்டின் எந்தப் பகுதியிலும் உறுதியான வீடு இல்லாத தனிநபர்கள்
 • மத்திய/ மாநில அரசாங்கத்தின் வீட்டு வசதி திட்டங்களில் முன்னதாக பயன்பெபற்ற தனிநபர்கள்
 • ரூ. 6 லட்சத்திற்கும் அதிகமான வருடாந்திர வருவாய் கொண்ட தனிநபர்கள்
 • இந்தத் திட்டத்திற்காக பட்டியலிட்ட நகரங்களுக்கு வெளியே வீடு வாங்கும் தனிநபர்கள் (இந்தப் பட்டியலை அரசாங்கம் அவ்வப்போது புதுப்பித்து வருகிறது) 

 

பிஎம்ஏஒய் திட்டம் கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கிய குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது:

 • கணவன்
 • மனைவி
 • திருமணமாகாத குழந்தைகள்

திருமண நிலையைப் பொருட்படுத்தாமல், வயதுவந்த சம்பாதிக்கும் உறுப்பினர்கள் எம்ஐஜி பிரிவில் ஒரு தனிக் குடும்பமாக நடத்தப்படுவார்.

இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பயனாளரின் பெயரில் அல்லது குடும்ப உறுப்பினர்கள் யாராவது பெயரில் உறுதியான வீடு இருக்கக் கூடாது என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்.

பிஎம்ஏஒய் திட்டத்திற்கு நீங்கள் தகுதிபெற உங்கள் குடும்பத்தின் வருடாந்திர வருமானம் முக்கிய காரணியாக உள்ளது. மூலதனங்கள், வேலைகள் மற்றும் மற்ற வகைகள் உட்பட பல்வேறு ஆதாரங்களிலிருந்து ஒரு குடும்பத்தில் உள்ள எல்லா உறுப்பினர்களின் வருமானத்தை கணக்கில் எடுத்து குடும்ப வருமானம் கணக்கிடப்படுகிறது என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்.

பிஎம்ஏஒய் திட்டத்தின் வேறுபட்ட வீட்டு பிரிவுகளுக்கான வருவாய் விதிமுறைகளை புரிந்துகொள்ள பின்வரும் அட்டவணையைப் பார்க்கவும்:

 வீட்டுப் பிரிவு

 வருடாந்திர குடும்ப  வருமானம்

 ஈடபிள்யூஎஸ்

 ₹ 3 லட்சம்

 எல்ஐஜி

 ₹ 6 லட்சம்

பிஎம்ஏஒய் திட்டத்தின் கீழாக வட்டி மானிய பயனை பெற உங்கள் விண்ணப்பம் பின்வரும் செய்முறைகளை கடக்க வேண்டும்:

 • உங்கள் வீட்டுக் கடன் வழங்கப்பட்டதும், உங்களுக்கு கடன் வழங்கும் நிறுவனம் மதிப்பீட்டிற்காக உங்கள் விண்ணப்ப விவரங்களை சென்ட்ரல் நோடல் ஏஜென்ஸிக்கு (சிஎன்ஏ) அனுப்பி வைக்கும்.
 • போதுமான கவனம் செலுத்தி ஆய்வு செய்த பின்னர், நீங்கள் தகுதி பெற்றால் சிஎன்ஏ மானியத்தை அங்கீகரிக்கும்
 • மானியம் உங்களுக்கு கடன் வழங்கும் நிறுவனத்திற்கு கொடுக்கப்படும்
 • உங்களுக்கு கடன் வழங்கும் நிறுவனம் அதனை உங்கள் வீட்டுக் கடன் கணக்கில் வரவு வைக்கும்
 • இவ்வாறு மானியம் கடனில் வரவு வைக்கப்படும்

மானியம் உங்கள் வீட்டுக் கடன் கணக்கில் வரவு வைக்கப்பட்டதும், நீங்கள் அதனை உங்கள் கடன் கணக்கில் சோதித்துப் பார்க்கலாம். மேலும், மானியம் பெற்ற பின்னர், உங்கள் ஈஎம்ஐ தொகையும் முன்பு இருந்ததை விட குறைக்கப்படும்.